பார்த்திபனுக்காக பொங்கி எழுந்து பலே ஐடியா கொடுத்த ரசிகர்! நன்றி கூறி... முதல் முறையாக வெளியிட்ட உண்மை!

Published : Jan 13, 2020, 03:00 PM ISTUpdated : Jan 13, 2020, 03:13 PM IST
பார்த்திபனுக்காக பொங்கி எழுந்து பலே ஐடியா கொடுத்த ரசிகர்! நன்றி கூறி... முதல் முறையாக வெளியிட்ட உண்மை!

சுருக்கம்

நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர், என பல்வேறு பரிமாணங்களில் ரசிகர்களால் நன்கு அறியப்பட்டவர் பார்த்திபன். இவரின், தனித்துவமான கதைகளுக்கும், திரைப்படங்களுக்கும் மிகப்பெரிய ரசிகர் கூட்டமே உள்ளது.  

நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர், என பல்வேறு பரிமாணங்களில் ரசிகர்களால் நன்கு அறியப்பட்டவர் பார்த்திபன். இவரின், தனித்துவமான கதைகளுக்கும், திரைப்படங்களுக்கும் மிகப்பெரிய ரசிகர் கூட்டமே உள்ளது.

அந்த வகையில் இயக்குனர் பார்த்திபன் இயக்கத்தில், கடந்த ஆண்டு வெளியான திரைப்படம் 'ஒத்த செருப்பு சைஸ் 7 ' , இந்த படத்தில், நடிகர் பார்த்திபன் மட்டுமே நடித்திருந்தார். 

ஒரே ஒரு ஆள் நடித்து இந்தியாவில் வெளியான முதல் படம் இது தான் என்கிற பெருமையும் இந்த படத்திற்கு கிடைத்தது. மேலும் பல பிரபலங்கள் இந்த படத்தை பார்த்து விட்டு மனதார பாராட்டி இருந்தனர். வித்தியாசமான முயற்சியாக உருவாக்கப்பட்ட இந்த படத்தை தொடர்ந்து, வரிசையாக பெரியப்படங்கள் வெளியாகி கொண்டிருந்ததால்,  திரையரங்கத்தில் இருந்து தூக்கப்பட்டது.

மேலும் இந்த படத்தை ஆஸ்கர் விருதுக்கும் அனுப்பி வைத்தார் பார்த்திபன். இதனை அவரே சமூக வலைத்தளத்திலும் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் தற்போது பார்த்திபனின் தீவிர ரசிகர் பொங்கி எழுந்து , நடிகர் பார்த்திபனுக்கு ஆறுதல் கூறி ஒரு ட்விட் போட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது... "பார்த்திபன் சார் நீங்கள் கவலைப்பட வேண்டாம். நீங்கள் பணத்தை செலவழிக்க வேண்டுமானால், அந்த  ஆஸ்கார் விருதை நாங்கள் விரும்பவில்லை. கோலிவுட் திரையுலகில் உங்களால் நீங்க ஆசைப்படும் இடத்தை பிடிக்க முடியாமல் போகலாம், ஹோலிவூட்டில் உங்களுக்கு இடம் உள்ளது. ஒரு ஹாலிவுட் தயாரிப்பாளரை அணுகி OS7 ஐ அதன் ஆங்கில பதிப்பில் உருவாக்குங்கள் சார் !!! நீங்கள் அங்கீகரிக்கப்படுவீர்கள் என்று டிவிட் செய்துள்ளார்.

 

இதை பார்த்து நடிகர் பார்த்திபன் அந்த ரசிகருக்கு தன்னுடைய நன்றியை தெரிவித்துக்கொண்டது மற்றும் இன்றி, அதற்கான பேச்சு வார்த்தைகள் போய் கொண்டுள்ளது என்கிற உண்மையையும் வெளிப்படுத்தியுள்ளார்.

மேலும் செய்திகளை படிக்க: அப்பட்டமா உடல் தெரியும் உடையில் விருது விழாவிற்கு வந்த சமந்தா

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

வேட்டியே அவிழும் அளவுக்கு ஆட்டம் போட்டபடி இளையராஜா கம்போஸ் பண்ணிய ஜாலியான பாடல் பற்றி தெரியுமா?
துரந்தர் விமர்சனம் : ரன்வீர் சிங்கின் ஆக்‌ஷன் விருந்து டேஸ்டா? இல்லை வேஸ்டா?