
காலம் மாற மாற... கலாச்சாரத்தை ஓரம்கட்டி விட்டு பல நடிகர் நடிகைகள் லிவிங் டூ கெதர் வாழ்க்கை, மற்றும் காதலில் இருக்கும் போதே கர்பமாவது போன்ற சம்பவங்கள் அதிகரித்து வருகிறது.
அதிலும் பாலிவுட் திரையுலகில் இது போன்ற சம்பவங்கள் அதிகம் என்றே கூறலாம்.
இந்நிலையில் சில மாதங்களுக்கு முன் அவசர அவசரமாக திருமணம் செய்துகொண்ட பிரபலங்கள் நேஹா துபியா-அங்கத் பேடி. இந்த அவசர கல்யாணத்தின் காரணம் என்ன என்பதை முதல் முறையாக ஊரறிய போட்டுடைத்துள்ளார் நேஹா.
அங்கத்துடன் காதலில் இருந்த நேஹா கர்பமாக இருப்பதை அறிந்தவுடன் இதை தன்னுடைய பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். அந்த அதிர்ச்சி செய்தியை கேட்டதும் நேஹாவின் அம்மா மூக்கில் இருந்து ரத்தம் வரத் துவங்கிவிட்டதாம், அதைப் பார்த்து அவர் பயந்திருக்கிறார். பின் பல்வேறு பிரச்சனைகளை தாண்டி... அவசர அவசரமாக இருவருக்கும் திருமணம் நடத்தி வைத்தார்களாம் இருவரின் பெற்றோரும். நேஹா முதல் முறையாக இந்த தகவலை கூறி இருப்பது ரசிகர்கள் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.