
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்த ஆக்சன் ஹீரோ... நடிகர் ஜாக்கி சான், இவருக்கு உலக அளவில் பல வெறித்தனமான ரசிகர்கள் உள்ளனர். இவருடைய முகத்தை கைகளில் டாட்டூ குத்திக்கொள்ளும் ரசிகர்களும் உண்டு.
ரசிகர்களிடம் இருக்கும் வரவேற்புக்காகவே தொடர்ந்து, இவர் பல படங்களில் தற்போது நடித்து அசத்தி வருகிறார்.
ஜாக்கிச்சான் மகள்:
இந்நிலையில், ஜாக்கிசான்னின் இளையமகள் எட்டா நங், கடந்த வருடம் தான் ஒரு ஓரினச்சேர்க்கையாளர் என கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். இதை தொடர்ந்து ஜாக்கி ஜான் அவருடைய இளைய மகளை வீட்டை விட்டு வெளியேறுமாறு கூறினார்.
தற்போது இவர் தன்னுடைய தோழி ஆண்டி அன்ட்டும் தங்குவதற்கு வீடு கூட இல்லாமல் சாலை ஓரத்தில் வசித்து வருவதாக கூறியுள்ளார். மேலும் தங்கள் இருவருக்கும் இடையே இருப்பது புனிதமான அன்பு மட்டுமே என்றும், தன்னுடைய அப்பா 395 மில்லியன் டாலருக்கு அதிபதி, ஆனால் தான் ஒரு ஓரின சேர்க்கையாளர் என்பதால் தன்னை நிராகரிப்பதாக கூறியுள்ளார்.
மேலும் தற்போது தங்களுக்கு உதவி செய்ய யாருமில்லை, பலரும் எங்களை பிரித்துவிடுவார்கள் என பயமாக இருக்கிறது. யாராவது தங்களின் அன்பை புரிந்துக்கொண்டு உதவி செய்ய வேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஜாக்கிசான் கருத்து:
நடிகர் ஜாக்கிச்சான், அவருடைய மகள் குறித்து பேசுகையில்... நடிகனாக ஜெயிக்க தெரிந்த நான் ஒரு தந்தையாக தோற்று விட்டேன் என கூறி இந்த சம்பவம் குறித்து பேச மறுத்து விட்டார். மேலும் இந்த சம்பவத்திற்கு பின் இவர் பெரிதாக வெளியில் எந்த ஒரு விழாக்களிலும் கலந்துக்கொள்ளாமல் தவிர்க்கு வருவதாக கூறப்படுகிறது.
அரண்மனை மாதிரி வீட்டில், மகாராணி போல் வாழ்ந்து வந்த பெண், தற்போது சாலை ஓரத்தில் வசித்து வருவதால் ஏதேனும் முடிவு எடுப்பாரா இல்லையா என பொறுத்திருந்து பாப்போம்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.