விஜய் ஒரு மோசமான நடிகர்…! விஜயை கேவலப்படுத்திய இணையதளம்…! சிம்புவையும் விடவில்லை…!

Asianet News Tamil  
Published : Jun 16, 2018, 11:01 AM ISTUpdated : Sep 19, 2018, 02:32 AM IST
விஜய் ஒரு மோசமான நடிகர்…! விஜயை கேவலப்படுத்திய இணையதளம்…! சிம்புவையும் விடவில்லை…!

சுருக்கம்

famous website says 6 famous Tamil actors are the worst actors

IMDb எனும் பிரபல இணையதளத்தை அமேசான் நிறுவனம் நடத்தி வருகிறது. இந்த இணையதளத்தில், உலகில் உள்ள அனைத்து திரைப்படங்கள் மற்றும் சின்னத்திரை நிகழ்ச்சிகள், போன்றவற்றின் விவரம் கிடைக்கும். மேலும் இதில் எல்லாவிதமான திரைப்படங்களும், விமர்சனம் செய்யப்பட்டிருக்கும்.

மிகப்பிரபலமான இந்த இணையதளம் சமீபத்தில், கோலிவுட்டை சேர்ந்த மோசமான நடிகர்கள் யார்? யார்? என ஒரு பட்டியலை வெளியிட்டிருக்கிறது. இந்த பட்டியலில் விஜயின் பெயரை குறிப்பிட்டிருக்கிறது இந்த இணையதளம். அதிலும் அவர் மோசமான நடிகர் என்பதற்கு காரணம் வேறு கொடுத்து விளக்கி இருக்கின்றனர்.

விஜய் கோலிவுட்டில் பிளாக் பஸ்டர் படங்களை கொடுக்கும் வெற்றி நாயகன். திரைத்துறையில் அவருக்கு நல்ல அனுபவம் இருக்கிறது. நன்றாக நடனம் ஆடுவார், வசனங்களை பேசுவார். ஆனால் படங்களில் அவருக்கான கதாப்பாத்திரத்திற்கு பொருந்தி போக மாட்டார். மேலும் அவருக்கு இருக்கும் அனுபவத்திற்கு அவர் இன்னும் நன்றாக நடிக்கலாம், எனவும் அந்த இணையதளத்தில் கூறப்பட்டிருக்கிறது.

விஜயை இவ்வாறு மோசமாக விமர்சித்திருப்பது, விஜய் ரசிகர்கள் மத்தியில் கடும் கோபத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த தளத்தில் விஜயின் பெயர் மட்டுமல்ல, வேறு சில நடிகர்களின் பெயரும் இடம் பெற்றிருக்கிறது. இந்த பட்டியலில் முதல் இடத்தில் இருப்பது, இயக்குனர் பாக்கியராஜ் மகன் சாந்தனு தான். நடிகர் ஆதி இரண்டாவது இடத்தையும், சிம்பு மூன்றாவது  இடத்தினையும் பிடித்திருக்கிறார். ஜெயம் ரவி மற்றும் விஷால் பெயரும் இந்த பட்டியலில் இருக்கிறது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

Anikha Surendran : சேலையில் காந்தப் பார்வையால் மயக்கும் குட்டி நயன் 'அனிகா' சுரேந்திரன்.. குவியும் லைக்ஸ்
Rakul Preet Singh : அழகிய தீயே.. நடிகை ரகுல் ப்ரீத் சிங்கின் ஹாட் போட்டோஸ்!!