என்னது பிரபல வில்லன் நடிகருக்கு இப்படியொரு மகளா?.... சோசியல் மீடியாவில் வைரலாகும் ஹாட் பிகினி புகைப்படங்கள்...!

By Kanimozhi PannerselvamFirst Published Dec 30, 2019, 6:37 PM IST
Highlights

தற்போது நீச்சல் குளத்தில் ஹாட் பிகினியில் இருக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். 

பிரபல இந்தி நடிகர் ஜாக்கி ஷெராப், தமிழில் ஆரண்ய காண்டம் படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானார். அதனைத் தொடர்ந்து சூப்பர் ஸ்டார் உடன் கோச்சடையான், ஷாந்தனுவின் முப்பரிமாணம், விஜய் நடிப்பில் வெளியான பிகில் ஆகிய படங்களில் மிரட்டலான வில்லனாக நடித்துள்ளார். தற்போது சூர்யாவின் சூரரை போற்று படத்தில் நடித்து வருகிறார். 

இந்தி திரையுலகில் மாஸ் காட்டி வரும் இளம் நடிகரான டைகர் ஷெராப், ஜாக்கி ஷெராப்பின் மகன் ஆவார். அவரது மகள் கிருஷ்ணா. ஜாக்கியின் செல்ல மகளான இவர், அவ்வப்போது சோசியல் மீடியாவில் ஹாட் புகைப்படங்களை வெளியிட்டு சர்ச்சையைக் கிளப்பி வருகிறார். கொஞ்ச நாட்களுக்கு முன்பு காதலர் உடன் பீச்சில் பிகினியில் சுற்றும் புகைப்படங்களை வெளியிட்டு பரபரப்பை கிளப்பினார்.

தற்போது நீச்சல் குளத்தில் ஹாட் பிகினியில் இருக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். நிர்வாண மனநிலை என்ற கேப்ஷன் உடன் கிருஷ்ணா பதிவிட்டுள்ள அந்த புகைப்படம் லைக்குகளை குவித்து வருகிறது. உடல் முழுவதும் கிருஷ்ணா குத்தியுள்ள அட்டகாசமான பச்சை, இளசுகளை வெகுவாக கவர்ந்துள்ளது. போட்டோவை பார்க்கும் அனைவரும் இப்படிப்பட்ட டேரர் வில்லனுக்கு, இவ்வளவு க்யூட்டான பொண்ணா என வியந்து போகின்றனர். 
 

click me!