
தயாரிப்பாளர்கள் கஷ்டப்பட்டு தயாரிக்கும் திரைப்படங்கள் பல, திரையரங்கில் ரிலீசான அடுத்த நாளே இணையதளத்திலும் ரிலீசாகி விடுகிறது. இதனால் அவர்களுக்கு போட்ட லாபம் கிடைப்பதில்லை. மேலும் பல மடங்கு நஷ்டம் ஏற்படுகிறது. இது போன்று திரைப்படங்களை திருட்டுத்தனமாக வெளியிடும் இணையதளங்களில், மிக பிரபலமானது தமிழ் ராக்கர்ஸ்.
நடிகர் விஷால் தயாரிப்பாளர் சங்க தலைவராக பதவி ஏற்ற உடன் செய்த முதல் சபதம், தமிழ் ராக்கர்ஸை ஒழிப்பது தான். ஆனால் அவர் சொன்னபடி எதுவும் நடைபெறவில்லை. தொடர்ந்து தமிழ் ராக்கர்ஸ் தனது வேலையை திறம்பட செய்து வருகிறது. இந்நிலையில் விஷாலும் தமிழ் ராக்கர்ஸ்க்கு ஆதரவு தருகிறார் போல? என்று சில தயாரிப்பாளர்கள் கோபமாக கேள்வி எழுப்பி இருந்தனர்.
இந்நிலையில் சமீபத்தில் திரைக்கு வந்த “ஒரு குப்பை கதை” திரைப்படம், மறுநாளே தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தில் ரிலீசாகியது. இது குறித்து போலீசார் நடத்திய விசாரணையில், மயிலாடுதுறையில் உள்ள கோமதி எனும் திரையரங்கின் மூலம் தான், இந்த திரைப்படத்தின் காட்சிகள் வெளியேறி இருக்கின்றன, என்ற தகவல் கிடைத்திருக்கிறது.
இந்த குற்றத்தில் ஈடுபட்டது அந்த திரையரங்கை சேர்ந்த ஊழியர் ஒருவர்தான் என்பதும் அப்போது தெரியவந்திருக்கிறது. இதனால் அந்த திரையரங்கை மூடி சீல் வைத்ததுடன், அந்த ஊழியரையும் கைது செய்திருக்கின்றனர் போலீசார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.