
நடிகர் சிம்பு மீது சமீபகாலமாக வந்த புகார்கள், அவரது திரையுலக வாழ்க்கையை வெகுவாக பாதித்தது. சிம்பு மீது விழுந்த குற்றச்சாட்டுகளை எல்லாம் விட்டு, இப்போது தான் கொஞ்சம் வெளியே வந்திருக்கிறார் அவர். தற்போது சிம்பு மணிரத்தினம் இயக்கத்தில் ”செக்கச்சிவந்த வானம்” படத்தில் நடித்திருக்கிறார். விண்ணை தாண்டி வருவாயா படத்தின் அடுத்த பாகத்திலும் நடிக்கவிருக்கிறார். மேலும் விஜயா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பிலும் ஒரு படத்தில் நடிக்கவிருக்கிறார் சிம்பு.
சிம்புவின் கையில் படமே இல்லை. இனி சிம்பு அவ்வளவு தான் என நினைத்த அனைவருக்கும், சிம்புவிற்கு குவிந்து வரும் இந்த பட வாய்ப்புகள் ஆச்சரியத்தை கொடுத்திருக்கிறது. சிம்பு தற்போது ஒரு வீடியோ ஒன்றை இணையதளத்தில் வெளியிட்டிருக்கிறார். அதில் தான் படப்பிடிப்பிற்கு தாமதமாக வருவது குறித்து எழுந்த குற்றச்சாட்டுகள் குறித்து பேசிய அவர், ரஜினி பற்றி ஒரு விஷயத்தை குறிப்பிட்டிருக்கிறார்.
சமீபத்தில் தனுஷ் “ பலருக்கும் ரஜினி ஆக ஆசை என குறிப்பிட்டு பேசி இருந்தார்”. அதற்கு மறைமுகமாக பதில் அளிக்கும் வகையில் இருக்கிறது, சிம்புவின் இந்த வீடியோ. இதில் நான் அடுத்த ரஜினி ஆக ஆசை படவில்லை. ரஜினி மாதிரி முன்னேற தான் ஆசைப்பட்டேன். என தெரிவித்திருக்கிறார் சிம்பு. இந்த வீடியோவில் பேசும் போது நெகிழ்ச்சியால் கண்கலங்கி இருக்கிறார் சிம்பு.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.