அமெரிக்காவில் ஆயிரம் ஏக்கரில் விவசாயம்... வியக்க வைக்கும் நடிகர் நெப்போலியனின் மறுபக்கம்

By Ganesh AFirst Published Oct 6, 2022, 11:57 AM IST
Highlights

தமிழ் சினிமாவில் பிசியான நடிகராகவும், அரசியல்வாதியாகவும் வலம் வந்த நடிகர் நெப்போலியன் தற்போது அமெரிக்காவில் ஆயிரம் ஏக்கரில் விவசாயம் செய்து வருகிறார்.

1980, 90-களில் தமிழ் சினிமாவில் பிசியான நடிகராக வலம் வந்தவர் . ஏராளமான ஹிட் படங்களைக் கொடுத்த இவர் அரசியலிலும் பிசியாக இயங்கி வந்தார். கடைசியாக தமிழில் ஹிப்ஹாப் தமிழாவின் அன்பறிவு படத்தில் நடித்திருந்தார் நெப்போலியன். முன்பளவிற்கு இவர் சினிமாவில் அதிகளவில் படங்களில் நடிப்பதில்லை. இதற்கு காரணம் இவர் குடும்பத்துடன் அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்டார்.

அங்கு தொழில் செய்து வரும் இவர் மறுபக்கம் விவசாயமும் செய்து வருகிறார். இவர் அங்கு ஆயிரம் ஏக்கர் விவசாய நிலம் வைத்திருக்கிறார். அங்கு விவசாயம் செய்வது பற்றி அவர் சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். அப்போது அவர் கூறியதாவது : நான் விவசாய குடும்பத்தில் பிறந்தவன் தான். சிறு வயதில் இருந்தே விவசாயம் செய்து பழகியதால், அமெரிக்கா சென்றபோதும் ஏன் விவசாயம் செய்யக்கூடாது என யோசித்து வந்தேன்.

இதையும் படியுங்கள்...  அஜித் படத்தில் நடிக்க அவ்வளவு ஆசை..! ஆனால் விஜய்யுடன் ஏற்பட்ட மனவருத்தம்? முதல் முறையாக கூறிய நெப்போலியன்!

அதற்காக சரியான இடத்தை தேடி வந்தேன். கடந்த ஆண்டு தான் ஒரு நிலத்தை வாங்கி விவசாயம் செய்ய தொடங்கினேன். நம்மூரில் உள்ளது போல் அங்கு நெல், கம்பு போன்றவற்றை அறுவடை செய்ய முடியாது என்பதால், அங்குள்ள சூழலுக்கு ஏற்ப வளரும் காய்கறிகளை விளைவித்து வருகிறேன். என் தோட்டத்தில் வளரும் நாட்டு காய்கறிகளை தான் என் வீட்டுக்கும் என் நண்பர்களுக்கு அளித்து வருகிறேன்.

சோளம், சோயா பீன்ஸ் என அங்குள்ள காலநிலைக்கு ஏற்ற காய்கறிகளை பயிரிட்டு வருகிறேன். குறிப்பாக என்னுடைய தோட்டத்தில் 200 ஏக்கருக்கு புல் விளைவித்து இருக்கிறேன். அதற்கு அங்கு செம்ம டிமாண்ட் உண்டு. குதிரை, மாடுகளுக்கு போட அதனை பயன்படுத்துவார்கள். அங்கு விவசாயத்திற்கு இயந்திரங்கள் தான் அதிகளவில் பயன்படுத்துகிறார்கள்.

200 ஏக்கர் புல்லையும் களையெடுக்க இரண்டே பேர் தான் வேலை செய்வார்கள் அந்த அளவுக்கு டெக்னாலஜி வளர்ந்துவிட்டது. நம்மூரிலும் இதுபோன்ற வளர்ச்சி ஏற்பட வேண்டும்” என நெப்போலியன் தெரிவித்துள்ளார். அவரின் இந்த முயற்சிக்கு பாரட்டுக்கள் கிடைத்து வருகின்றன.

இதையும் படியுங்கள்... அமெரிக்காவில் நடிகர் நெப்போலியன் கட்டிய அம்மன் கோவில்...

click me!