
இந்தியாவை ஆட்டி படைக்கும் கொரோனா வைரஸ் திரைத்துறையினர் மத்தியில் பீதியை கிளப்பி வருகிறது. காரணம் ஹாலிவுட் முதல் பாலிவுட் வரை பல பிரபலங்கள் கொரோனா பாதிப்பிற்கு உயிரிழப்பது கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் உலக நாயகன் கமல் ஹாசனை ஆரம்ப காலத்தில் இந்தி படங்களில் நடிக்க வைத்த தயாரிப்பாளர் அனில் சூரி கொரோனாவால் உயிரிழந்த சம்பவம் பாலிவுட்டில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: “காட்மேன்” டீசரில் அப்படி என்ன தப்பிருக்கு?... சர்ச்சை தொடருக்கு ஆதரவாக சீறும் திருமா...!
1984ல் வெளியான ராஜ் திலக் படத்தில் கமல், தர்மேந்திரா, ஹேமா மாலினி, சரிகா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இந்த படத்தின் தயாரிப்பாளரான அனில் சூரிக்கு கடந்த 2ம் தேதி காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. அதற்கு அடுத்த நாள் மூச்சு திணறல் உள்ளிட்ட பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளன. இதையடுத்து லீலாவதி மற்றும் ஹிந்துஜா மருத்துவமனைகளுக்கு கொண்டு சென்ற போது அனில் சூரிக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இறுதியாக அட்வான்ஸ்ட் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அனில் சூரி, கடந்த வியாழக்கிழமை மாலை 7 மணி அளவில் உயிரிழந்தார்.
இதையும் படிங்க: யுவனை மதம் மாற்றினேனா?... ஆதாரங்களை வெளியிட்டு அதிரடி காட்டிய இளையராஜா மருமகள்...!
அனில் சூரியின் மரணத்தை உறுதி செய்த அவரது சகோதரர் ராஜிவ் சூரி, அவருக்கு கோவிட் 19 இருந்தது. கடந்த புதன்கிழமை அவரை மருத்துவமனையில் அட்மிட் செய்தோம். வியாழக்கிழமை இரவு அவருக்கு உடல்நிலை மோசமடைந்தது, வெண்டிலேட்டர் சப்போர்ட் கொடுக்கப்பட்டது. இருப்பினும் இரவு 7 மணி அளவில் உயிர் பிரிந்தது என்று சோகமாக பகிர்ந்துள்ளார். நேற்று நடைபெற்ற இறுதிச்சடங்கில் அனில் சூரியின் குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் மட்டுமே கலந்து கொண்டனர். அவர்களும் PPE எனப்படும் பாதுகாப்பு உடையை அணிந்துகொண்டு தான் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது. 77 வயதாகும் அனில் சூரிக்கு மனைவி மற்றும் இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.