
இயக்குனர் சிவா இயக்கத்தில், அஜித் காஜல் அகர்வால், அக்ஷராஹாசன், மற்றும் விவேக் ஓப்ராய் நடித்து கடந்த வியாழக்கிழமை வெளியான திரைப்படம் விவேகம்.
இந்த படத்தில் வசூல் நாளுக்கு நாள் பல சாதனைகளை படைத்து கொண்டே வருகின்றது. ஒரு சிலர் இந்த திரைப்படம் குறித்து நெகட்டிவ் விமர்சனங்களை கூறினாலும் படத்தின் வசூலுக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை. இதுவரை அனைத்து திரையரங்கங்களிலும் ஹவுஸ் புல்லாக தான் ஓடிக்கொண்டிருக்கிறது.
ஆனால், இப்படத்திற்கு பல திரையரங்கங்களில் டிக்கெட் விலையை ராக்கெட் அளவிற்கு உயர்த்தி விற்று வருகின்றனர், இதனால் ஒரு சில ரசிகர்களும் பொதுமக்களும் ஒரு சில திரையரங்கங்களில் சண்டையிலும் ஈடுபட்டனர்.
இதை கேள்விப்பட்ட பிரபல விநியோகஸ்தர் திருப்பூர் சுப்ரமணியம் கோபமாக சில கருத்துக்களை வெளியிட்டுள்ளார், இதில் ‘முதலில் நடிகர்கள் சிஸ்டம் சரியில்லை என்று பேசுவதற்கு முன்பு, உங்கள் படங்களின் டிக்கெட் விலையை குறைக்க சொல்லுங்கள் என்று கூறியுள்ளார்.
மேலும் விவேகம் படத்திற்கு பல இடங்களில் அதிக தொகை வைத்து டிக்கெட்டுகளை விற்று வருகின்றனர், ஆனால், என் திரையரங்கில் ரூ 100-க்கு தான் விற்றேன், 4 நாளும் அனைத்து காட்சிகளும் ஹவுஸ்புல் தான்.
மற்ற இடங்களில் ரூ 1000 வரை டிக்கெட் விற்கிறார்கள், அதையெல்லாம் தயாரிப்பாளர் சங்கம் கேள்வி கேட்காதா?, நடிகர்கள் என்றால் பயமா?’ என ஆதங்கப்பட்டுள்ளார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.