முன்னணி காமெடி நடிகர் திடீர் மரணம்..! அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

By manimegalai aFirst Published Aug 12, 2021, 8:21 PM IST
Highlights

பிரபல காமெடி நடிகரும், டப்பிங் கலைஞருமான காளிதாஸ் உடல் நலக்குறைவு காரணமாக இன்று திடீர் என உயிரிழந்துள்ளார். இந்த தகவல் திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 

பிரபல காமெடி நடிகரும், டப்பிங் கலைஞருமான காளிதாஸ் உடல் நலக்குறைவு காரணமாக இன்று திடீர் என உயிரிழந்துள்ளார். இந்த தகவல் திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சுமார் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட படங்களில் டப்பிங் கலைஞராக பணியாற்றியுள்ளவர் காளிதாஸ். மேலும் பல படங்களில் நடிகர் வடிவேலுவுடன் காமெடி காட்சியில் நடித்து, ரசிகர்களை சிரிக்க வைத்துள்ளார். பார்ப்பதற்கு நன்கு உயரமாகவும் வில்லன் நடிகர் போல் தோற்றமளித்தாலும் உண்மையில் சினிமா வட்டாரத்தில் தங்கமான குணம் கொண்டவர் என பெயரெடுத்தவர்.  திரைப்படங்களை தொடர்ந்து சில தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார்.

இவர் கடைசியாக இவர் கே ஜி எஃப் படத்தின் இரண்டாம் பாகத்தில் வில்லன் ஒருவருக்கு டப்பிங் பேசியுள்ளார். முதல் பாகத்திலும் இவர் அந்த நடிகருக்கு டப்பிங் பேசி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இவருக்கு கடந்த சில வருடங்களாகவே உடல்நிலையில் ஒருசில பிரச்சனைகள் இருந்து வந்துள்ளது.  இவரது ரத்தத்தில் பிரச்சினை இருப்பதாக மருத்துவர்கள் கூறியதை தொடர்ந்து, ரத்தத்தை முழுமையாக மாற்று வேண்டும் என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

எனவே மருத்துவர்களின் அறிவுரையின்படி ரத்தம் மாற்றப்பட்ட போதும் திடீரென இவரது உடல்நிலை மோசமாகி இன்று காலமானார்.  65 வயதாகும் இவருடைய மனைவி ஏற்கனவே இறந்து விட்ட நிலையில், ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். இவருடைய இறுதி ஊர்வலம் நாளை நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது. இவரது மறைவை அறிந்த ரசிகர்களும், பிரபலங்களும் தொடர்ந்து தங்களுடைய இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.

click me!