
செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடித்த துள்ளுவதோ இளமை படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் ஷெரின். அதன் பின்னர் விசில் போன்ற சில படங்களில் நடித்திருந்தாலும், ஷெரினால் சினிமாவில் பெரிய இடத்தை பிடிக்க முடியாவில்லை. ஆனால் நீண்ட இடைவெளிக்குப் பிறகு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக ஷெரின் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சிக்கு பிறகு மீண்டும் தமிழ் இளைஞர்களின் கனவு கன்னியாக மாற ஆரம்பித்தார்.
உடல் எடையை குறைத்து மீண்டும் ஸ்லிம் லுக்கிற்கு மாறிய ஷெரின் சோசியல் மீடியாவில் படு ஆக்டிவாக இருந்து வருகிறார் போட்டோ ஷூட், பட அப்டேட் என அனைத்தும் ரசிகர்களுடன் பகிர்ந்து வருகிறார். அப்படி ஷெரின் தற்போது வெளியிட்டுள்ள செய்தி ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. ஷெரின் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில்,“எனக்கு கோவிட் 19 பாசிட்டிவ் என வந்துள்ளது. கடந்த 3-4 நாட்களில் என்னை தொடர்பு கொண்டவர்கள் தயவு செய்து உங்களை தனிமைப்படுத்திக் கொண்டு, விரைவில் பரிசோதனை செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார். மேலும் எனக்கு இந்த தொற்று எங்கியிருந்து ஏற்பட்டிருக்கும் என தெரியவில்லை, எனவே தன்னை சந்தித்தவர்கள் தனிமைப்படுத்திக் கொண்டு, பரிசோதனை செய்து பாதுகாப்புடன் இருக்கும் படி கேட்டுக்கொண்டுள்ளார்.
தனக்கு சில அலர்ஜி இருப்பதால் மருத்துவர்களை கலந்தாலோசித்து தடுப்பூசி செலுத்திக் கொண்ட ஷெரின் சோசியல் மீடியாவில் அறிவித்திருந்தார். எனவே தனது ரசிகர்களும் தடுப்பூசி செலுத்திக் கொண்டு பாதுகாப்பாக இருக்கும் படி அறிவுறுத்தியிருந்தார். இரண்டு டோஸ் தடுப்பூசியும் செலுத்திக்கொண்ட ஷெரினுக்கு தொற்று உறுதியாகியுள்ளது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இருப்பினும் தடுப்பூசி போட்டுக் கொண்டதால் ஷெரினுக்கு பெரிதாக பாதிப்பு இருக்காது என நம்பப்படுகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.