பிரபல தொகுப்பாளினி திடீர் தற்கொலை...!

 
Published : Dec 13, 2017, 04:14 PM ISTUpdated : Sep 19, 2018, 01:40 AM IST
பிரபல தொகுப்பாளினி திடீர் தற்கொலை...!

சுருக்கம்

famous anchor sucide

வெள்ளித்திரை நடிகைகளுக்கு, எப்படி ஒரு ரசிகர் கூட்டம் இருக்கின்றதோ அதே போல சின்னத்திரையில் தொகுப்பாளினியாக வருபவர்களுக்கும் ரசிகர்கள் உள்ளனர் என்பது அனைவரும் அறிந்தது தான். அப்படி தொகுப்பாளராக சின்னத்திரையில் அறிமுகமாகி, வெள்ளித்திரையில் மின்னும் பல நட்சத்திரங்களும் உள்ளனர்.

இந்நிலையில்,  மும்பையைச் சேர்ந்த 24 வயது  நிகழ்ச்சித் தொகுப்பாளினி அர்பிதா திவாரி என்பவர்  தற்போது மர்மமான முறையில் அடுக்கு மாடிக் குடியிருப்பில் இறந்து கிடந்துள்ளார்.

இவர் தன் நண்பர்களுடன் சேர்ந்து பார்ட்டி நிகழ்ச்சிகள் மற்றும் ஒரு சில டிவி நிகழ்சிகளிலும் தொகுத்து வழங்கி வந்ததாகக் கூறப்படுகிறது.  இந்நிலையில் அவர் தன் நண்பர் பங்கஜ் உடன் மல்வானியின் உள்ள நண்பரின் வீட்டிற்கு சென்றுள்ளார்.

சென்ற இடத்தில் இருந்து வீடு திரும்ப நேரமானதால், இரவு உணவு விடுதியிலேயே அறை எடுத்துத் தங்கியதாகத் தெரிகிறது. காலையில் 7 மணியளவில் சக நண்பர் எழுந்து பார்த்தபோது பாத்ரூம் மூடிய நிலையில் இருந்துள்ளது.

இதனால்  அர்பிதா உள்ளே இருக்கிறார் என நினைத்து மீண்டும் தூங்கிய நண்பர் எழுந்து வந்து பார்த்த போது பாத்ரூம் மீண்டும் பூட்டியபடியே இருந்துள்ளது. இதனால் சந்தேகமான அவர் லாக்கை உடைத்து உள்ளே பார்த்த போது,

ஜன்னல் வழியே அர்பிதா வெளியே குதித்து இறந்துள்ளது தெரிய வந்துள்ளது. அவரது சடலம் கட்டடத்தின் பின் பகுதியிலிருந்து குழாயில் தொங்கியபடி கிடந்துள்ளது. அவருடைய சடலத்தை மீட்ட போலீசார், அர்பிதாவின் மரணம் குறித்து தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர். மேலும் இவருடைய தற்கொலைக்கும் இவருடைய நண்பருக்கும் ஏதேனும் தொடர்புள்ளதா என்கிற கோணத்திலும் விசாரணை நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது. 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

நீயெல்லாம் கடவுளா? உனக்கு எதுக்கு பூஜை? விவாகரத்து வதந்திக்கு மத்தியில் வாழ்வின் வலிகளைப் பகிர்ந்த செல்வராகவன்!
கொங்குநாட்டை அதிரவிட்ட விஜய்... ஈரோட்டில் தளபதி எடுத்த மாஸ் செல்பி வீடியோ வைரல்