
இடையழகை காட்டி 90ஸ் கிட்ஸ்களின் தூக்கத்தை கொடுத்தவர் சிம்ரன். ஆயிரம் நடிகைகள் வந்தாலும், நிலவை கொண்டு வா... கட்டிலில் கட்டி வை என குலுக்கி, குலுக்கி ஆடிய சிம்ரனை யாராலும் மறக்க முடியாது. தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் தான் சிம்ரன். அஜித், விஜய், சூர்யா என முன்னணி நடிகர்களுடன் நடித்து பல ஹிட் படங்கள் கொடுத்தவர்.
இதையும் படிங்க: அப்பா முன்பே நடிகைக்கு முரட்டு லிப் லாக் கொடுத்த பிரபல இயக்குநரின் மகன்... வைரலாகும் போட்டோ...!
கல்யாணம் குடும்பம் என செட்டில் ஆன சிம்ரன், நீண்ட நாட்களுக்குப் பிறகு பேட்ட படத்தில் சூப்பர் ஸ்டாருக்கு ஜோடியாக நடித்தார். அதையடுத்து சிவகார்த்திகேயனின் சீமராஜா படத்தில் டேரர் வில்லியாக வந்து கலக்கினார். தற்போது தனது இரண்டாவது இன்னிங்ஸை வெற்றிகரமாக ஆரம்பித்துள்ள சிம்ரன் சோசியல் மீடியாவில் படு ஆக்டீவாக இருக்க திட்டமிட்டுள்ளார்.
தற்போது மாதவன் நடித்து வரும் நம்பி நாராயணனின் பயோபிக்கில் மாதவனுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். இந்நிலையில் சிம்ரன் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில், தான் இப்போது டிக்டாக் செயலியில் இணைந்து இருப்பதாகவும், அதன் மூலம் ரசிகர்கள் என்னுடன் தொடர்பில் இருக்கலாம் என தெரிவித்துள்ள அவர், தனது டிக்டாக் ஐடியை இணைத்துள்ளார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.