
பிரபல நடிகரும், முன்னாள் எம்.பியுமான ஜே.கே.ரித்தீஷ் நேற்று மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். 46 வயதே ஆகும் இவரின் இந்த எதிர்பாராத மரணம், திரையுலகினர் மற்றும் அவருடைய தொண்டர்கள் பலரையும் அதிர்ச்சி அடைய செய்தது.
அரசியல் மற்றும் திரையுலகில் மிகக் குறுகிய காலத்திலேயே, தன்னுடைய நல்ல குணத்தாலும் மற்றவர்களுக்கு உதவும் மனப்பான்மையாலும் பிரபலமடைந்தவர் ரித்தீஷ்.
இந்நிலையில் பிரபல காமெடி நடிகை ஆர்த்தி, அவருடைய ட்விட்டர் பக்கத்தில் ரித்தீஷ் குறித்தும், அவருடைய உண்மையான குணம் குறித்தும், தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவத்தை தன்னால் நம்ப முடியவில்லை என்றும், இதை கனவிலும் கூட தன்னால் நினைத்து பார்க்க முடியவில்லை என்றும் கண்ணீரோடு உள்ள ஸ்மைலி பதிவிட்டு தெரிவித்துள்ளார். மேலும் அவருடைய ஆத்மா சாந்தி அடைய வேண்டுவதாகவும், ஜே.கே ரித்தீஷ் அண்ணன் நான் கண்ட வள்ளல்களில் ஒருவர் என குறிப்பிட்டுள்ளார்.
ஆர்த்தியின் இந்த ட்விட்டருக்கு பலரும் இதுவே அவரின் உண்மையான குணம் என வருத்தத்தோடு கூறி வருகிறார்கள்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.