
உடல்நலக்குறைவு காரணமாக நடிகர் தீப்பெட்டி கணேசன் காலமான செய்தி தமிழ் திரையுலகில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ரேனிகுண்டா, தென்மேற்கு பருவக்காற்று, பில்லா-2,நீர்ப்பறவை, கண்ணே கலைமானே உள்ளிட்ட பல படங்களில் குணச்சித்திர கேரக்டரில் நடித்து புகழ் பெற்றவர் நடிகர் கார்த்தி என்ற தீப்பெட்டி கணேசன். ஆனால் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் இல்லாத காரணத்தாலும், கொரோனாவாலும் அவரது வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது
.
மனைவி மற்றும் 2 குழந்தைகளுடன் வாழ்ந்து வந்த தீப்பெட்டி கணேசன் கொரோனா ஊரடங்கில் தனது குழந்தைக்கு பால் வாங்க கூட பணம் இல்லை என கண்ணீர்மல்க வீடியோ வெளியிட்டிருந்தார். இதனையடுத்து கவிஞர் சினேகன், நடிகர் ராகவா லாரன்ஸ் உள்ளிட்டோர் உதவி செய்தனர்.
இந்நிலையில், உடல்நலக் குறைவால் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அவருக்கு இயக்குநர் சீனு ராமசாமி உள்ளிட்ட பல்வேறு திரையுலக பிரபலங்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.