
ஹெச்.வினோத் இயக்கத்தில் தல அஜித் நடித்து வரும் “வலிமை” படத்தின் ஷூட்டிங் இம்மாதத்துடன் நிறைவடையும் என படத்தின் தயாரிப்பாளரான போனிகபூர் ஆங்கில பத்திரிகை ஒன்றிற்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார். இதற்காக இறுதிக்கட்ட கிளைமேக்ஸ் காட்சிகளை ஸ்பெயினில் படமாக்க திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின. சோசியல் மீடியாவில் எந்த பக்கம் திரும்பினாலும் அஜித் ரசிகர்கள் கேட்கும் ஒரே கேள்வி “வலிமை” அப்டேட் எங்கே? என்பது தான். குறைந்தபட்சம் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரையாவது வெளியிடுங்கள் என கோரிக்கை வைத்து வருகின்றனர்.
இந்நிலையில் தமிழ் சினிமாவின் டாப் நடிகர்கள் குறித்து பரவி வரும் வதந்திகளை உண்மையா? என்பதை ஆராயாமலேயே எப்படி வேண்டுமானாலும் விமர்சிக்கலாம் என்ற வழக்கம் தற்போதைய சோசியல் மீடியா தலைமுறையிடம் அதிகரித்து வருகிறது. அப்படி பிரபல நடிகரான சித்ரா லட்சுமணியின் யூ-டியூப் நிகழ்ச்சியில் தல அஜித் பற்றி கேட்கப்பட்ட கேள்வி அவருடைய ரசிகர்களை கோபமடைய வைத்துள்ளது.
தல அஜித் விடிய, விடிய குடிப்பாராமே?... அப்படியா? என கேள்வி எழுப்பி உள்ளார். இதற்கு பதிலளித்துள்ள சித்ரா லட்சுமணன், கடந்த 25 ஆண்டுகளாக தல அஜித் மதுவை கையால் கூட தொட்டது கிடையாது என அழுத்தம் திருத்தமாக நெந்தியடி பதில் கொடுத்துள்ளார். இப்படியொரு கேள்வி கேட்ட நபரை தல ரசிகர்கள் சோசியல் மீடியாவில் விளாசி வருகின்றனர்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.