
ஹாலிவுட், பாலிவுட், கோலிவுட் என அனைத்து மொழி சினிமாக்களிலும் எப்போதுமே சர்ச்சைகளுக்குப் பஞ்சமே இல்லை. தற்போதைய சர்ச்சை இது.. இதில் சிக்கியுள்ளவர் போஜ்புரி சினிமாவில் நடித்து வரும் பிரபல நடிகர் மனோஜ் பாண்டே, இவர் பிரபல பாடகி ஒருவரை ஒரு நிகழ்ச்சியில் பார்த்துள்ளார். பின் அந்தப் பாடகியை திரைப்படங்களில் தனக்கு கதாநாயகியாக நடிக்க வைப்பதாக ஆசை வார்த்தைகள் கூறி பழகத் தொடங்கியுள்ளார்.
ஒரு கட்டத்தில் பாடகி கர்ப்பமாகியுள்ளார். உடனே மனோஜ் அதை கலைக்க பல விதங்களில் இவருக்கு நெருக்கடிகள் கொடுத்துள்ளார். இதற்கு பாடகி மறுக்கவே தற்போது இந்தப் பிரச்சனை பெரிதாகியுள்ளது.
இதைத் தொடர்ந்து அந்தப் பாடகி போலீஸில் புகார் அளிக்க, மனோஜ் பாண்டேக்கு எதிராக பாலியல் பலாத்காரம் மற்றும் நம்பிக்கை மோசடி ஆகிய பிரிவுகளில் வழ்க்குப்பதிவு செய்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.