பிரபலங்கள் கலந்துகொள்ளவுள்ள லயோலா கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் மாநாடு !

 
Published : Sep 23, 2017, 04:35 PM ISTUpdated : Sep 19, 2018, 01:13 AM IST
பிரபலங்கள் கலந்துகொள்ளவுள்ள லயோலா கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் மாநாடு !

சுருக்கம்

celebrates participate layola collage alumni meet

லயோலா கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் மாநாடு அடுத்த மாதம் அக்டோபர் 1 மற்றும் 2ஆம் தேதிகளில் நடக்கிறது. இது குறித்து லயோலா கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் சங்க தலைவரும், வி,ஐ,டி பல்கலைக் கழக வேந்தருமான ஜி.விஸ்வநாதன் கூறியதாவது ,

லயோலா கல்லூரி தனது நூற்றாண்டு விழாவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இந்தக் கல்லூரியில் படித்த மாணவர்கள் இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் வாழ்க்கையில் சாதனை படைத்தவர்களாக இருக்கிறார்கள். 

இந்தக் கல்லூரியில் படித்த 50க்கும் மேற்பட்டவர்கள் சினிமா துறையில் நடிகர்களாகவும் , டைரக்டர்களாகவும் , ஊடகத் துறையிலும் உள்ளனர். அவர்கள் மாநாட்டில் கௌரவிக்கப்படுகிறார்கள். நடிகர் ஜெயம்ரவி விஷால் உட்பட பலர் கலந்துகொள்ள உள்ளார்கள். 2-வது நாள் நிகழ்ச்சி அடுத்த நாள் காலை 10:30 மணிக்கு தொடங்குகிறது. இதில் 2ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொள்ள உள்ளார்கள். அவர்கள் இந்தியாவின் பல்வேறு பகுதியில் இருந்தும் , வெளிநாடுகளில் இருந்தும் வருவார்கள்.

 லயோலா கல்லூரியின் செயலாளர் மற்றும் தாளாளர் ச.லாசர் அடிகளார், முதல்வர் ம. ஆரோக்கியசாமி அடிகளார், முன்னாள் மாணவர்கள் சங்க இயக்குநர் தாமஸ் அடிகளார் ஆகியோர் கூறியதாவது: கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் மாநாட்டை சிறப்பாக நடத்தவுள்ளோம். மாணவர்களின் தேர்ச்சி விகிதம் , மாணவர்கள் நடந்துகொள்ளும் விதம் , கல்லூரியின் ஆராய்ச்சி ஆகியவற்றின் அடிப்படையில் இந்தியாவில் உள்ள கலை அறிவியல் கல்லூரிகளின் தரவரிசை பட்டியலில் லயோலா கல்லூரி இரண்டாம் இடம் பெற்றுள்ளது. சமூகப் பணிகளிலும் ஈடுபட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

லட்சங்களில் சம்பளம் வாங்கிய டான்சர் குயீன் ரம்யா, அழகு ராணி வியானா: ஒரு நாளைக்கு எத்தனை லட்சம்?
அடுத்தடுத்து நடையை கட்டிய போட்டியாளர்கள்: இந்த வாரத்தில் டபுள் எவிக்‌ஷன்: பிக் பாஸின் அதிரடி ட்விஸ்ட்!