
நடிகர் ஜெய் மற்றும் நஸ்ரியா நடித்து கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியாகி அனைத்து தரப்பு ரசிகர்களிடமும் நல்ல வரவேற்பைப் பெற்ற திரைப்படம் “ திருமணம் எனும் நிக்காஹ்”. இந்த அழகான காதல் கதையை இயக்கியவர் இயக்குநர் அனீஸ்.
இதைத் தொடர்ந்து 2 வருடமாக எந்த ஒரு திரைப்படத்தையும் இயக்காமல் இருந்து வந்த இவர், தற்போது இரண்டு வருடம் கழித்து “உலகப் புகழ்பெற்ற காவியத்தையும், இதுவரை பதிவு செய்யப்படாத ஓர் உண்மைச் சம்பவத்தையும் மையமாகக் கொண்டு உருவாகும் படத்தை இயக்க உள்ளார். தமிழில் ஒரு படம் இதுபோல் எடுக்கப்படுவது இதுதான் முதல் முறை...
புதுமையான த்ரில்லராக உருவாகும் இதில், கன்னடத்தில் மிகவும் பிரபலமான “ லூசியா “ புகழ் நடிகர் சதீஷ் நின்சாம் கதாநாயகனாக நடிக்கிறார். இவர் தமிழில் அறிமுகமாகும் முதல் படம் இது தான். ஜிப்ரான் இசையமைக்கும் இப்படத்துக்கு ஒளிப்பதிவு N. ஷண்முக சுந்தரம்.
Purple Frames நிறுவனம் தயாரிக்கும் இப்படத்துக்கான மற்ற நடிகர் , நடிகையர் தேர்வு நடைபெற்றுவருகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.