
பிரபல பஞ்சாப் பாடகரான நவ்தீப் சிங் மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
22 வயதான நவ்தீப் சிங், சண்டிகரில் உள்ள எஸ்ஏஎஸ் நகரில் வசித்து வந்துள்ளார்.
தன்னுடைய பாடல்களால் தனக்கென்று ரசிகர்கள் பட்டாளமே வைத்துள்ளார். இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று இவரை அடையாளம் தெரியாத நபர்கள் சுட்டுக்கொன்று உள்ளனர்
5 குண்டுகள் பாய்ந்த நிலையில், ரத்த வெள்ளத்தில் மிதந்த இவரை பார்த்த அருகில் இருந்தவர்கள் காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்துள்ளனர்.
காரின் அருகிலேயே சுடப்பட்ட நவ்தீப்
நிசான் மைக்ரா காரை பயன்படுத்தி வந்த நவ்தீப், காரின் அருகிலேயே சுட்டுக்கொள்ளப்பட்டு உள்ளதாக தெரிகிறது
மேலும், அவருடைய எந்த பொருட்களும் திருடு போகவும் இல்லையாம்.... எனவே வேறு எந்த காரணத்திற்காக பாடகரை சுட்டுக் கொன்றுள்ளனர் என்ற பாணியில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சொந்த ஊர் பெஹ்ரா கிராமம்....
நவ்தீப் கொலையாவதற்கு சில நிமிடங்கள் முன்பாகத்தான் தன் சொந்த ஊருக்கு வந்துக்கொண்டிருப்பதாக தன் தாயிடம் கூறி உள்ளார்.
அவர் சொன்ன நேரத்தில் ஊர் வந்து சேராததால் சந்தேகம் அடைந்த அவரது பெற்றோர் அவரை தேட தொடங்கி உள்ளனர்.
இதற்கு முன்னதாக, ஒரு உணவகத்தில் ஒரு பெண்ணுடன் அமர்ந்து உணவருந்தியதாக நவ்தீப்பின் உறவினர் தெரிவித்து உள்ளார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.