’புரட்சிக்கும் நடிகன் சத்யராஜ்-க்கும் என்ன சம்பந்தம்!? சத்யராஜின் முகத்திரையை கிழிக்கும் பதிவு... வலைதளங்களில் வைரல்

By sathish kFirst Published Sep 17, 2018, 12:11 PM IST
Highlights

’புரட்சிக்கும் நடிகன் சத்யராஜ்-க்கும் என்ன சம்பந்தம்! யாரை முட்டாளாக்கிக் கொண்டிருக்கிறார் இந்த கூத்தாடி அரசியல்வாதி?’ இணையவெளிகளில் இப்போது வெடிக்க துவங்கியிருக்கும் விமர்சனம் இதுதான். கோடம்பாக்கம் வரை கிடுகிடுப்பை கிளப்ப துவங்கியுள்ளது இந்த விவகாரம். 

பகுத்தறிவுவாதியாக தன்னை அடையாளம் காட்டிக் கொண்டு செயல்பட்டு வரும் சத்யராஜை சல்லடை சல்லடையாக பிரித்து மேய்கிறார்கள் அந்த கட்டுரைகளில். இந்த விமர்சனத்தின் பின்புலத்தை தீவிரமாக கவனித்தால், கடவுள் ஆதரிப்பு நபர்களின் கைங்கர்யமாகதான் தெரிகிறது. 

சத்யராஜ் மீது திடீர் கோபம் ஏன்? அலசுவோம்...

அதாவது சமீபத்தில் கோயமுத்தூரில் மறைந்த முதல்வர் கருணாநிதிக்கு புகழஞ்சலி கூட்டம் நடந்திருக்கிறது, அதேபோல் ஈரோட்டில் ம.தி.மு.க.வின் முப்பெரும் விழா நடந்திருக்கிறது. இவை இரண்டிலும் கலந்து கொண்ட சத்யராஜ் நாத்திகத்தை தூக்கிப் பிடிக்கிறேன் பேர்வழியென்று ஆன்மிகத்தை ஓவராய் இடித்தாராம், கூடவே தன்னையும் மிகப்பெரிய பகுத்தறிவுவாதியாக பிம்பப்படுத்தி கைதட்டல் வாங்கிக் கொண்டாராம். இதற்குப் பிறகே சத்யராஜை குறிவைத்து விமர்சனங்கள் குவிகின்றன. 

விமர்சகர்கள் சத்யராஜின் மீது வைக்கும் குற்றச்சாட்டுகள், ஆதங்கங்கள், தாக்குதல்களின் சாராம்சம் இவைகள்தான்!...

*’புரட்சித் தமிழன்’ என்று கொண்டாடப்படுமளவுக்கு சத்யராஜ் தமிழகத்துக்கு செய்த நன்மை என்ன? எந்த விதத்தில் புரட்சி செய்து தமிழகத்தின் பெயருக்கு பெருமை சேர்த்தார்?

*கேப்டன் விஜயகாந்த், தமிழை தவிர வேறெந்தெ மொழியிலும் நடித்ததில்லை. வந்த வாய்ப்புகளை கூட மறுத்தார். ஆனால் சத்யராஜோ சம்பளம் ஓ.கே.! என்றால் எந்த மொழிக்காகவும் வேஷம் கட்ட தயாராகிடுவார். தமிழின் பெருமை, வட இந்திய ஆதிக்கம்! என்றெல்லாம் சீன் போடும் இவர், ஷாருக்கான் நடித்த சென்னை எக்ஸ்பிரஸ்! எனும் ஹிந்திப்படத்தில் ஆரம்பித்து மலையாள படங்களிலும் கல்லா கட்டியவர், இன்னும் கட்ட தயங்க மாட்டார். 

*தன்னை பகுத்தறிவுவாதியாக காட்டி பில்ட் - அப் கொடுக்கும் சத்யராஜ், சினிமாக்களில் நெற்றி நிறைய பட்டையணிய ஒருபோதும் தயங்கியதில்லை. வில்லாதி வில்லன் சீனியர் அட்வோகேட் கேரக்டரில் பக்கா பிராமணனாக வேஷம் கட்டியிருப்பார். ’உடன்பிறப்பு’ படத்தில் ‘சாமி வருது சாமி வருது’ன்னு விநாயகரை தூக்கிப் பிடித்து ஆடியிருப்பார். 
ஆக காசுக்காக கொள்கையை விற்கும் இவர் எப்படி புரட்சிவாதி? பகுத்தறிவுவாதி?

*தன் மனைவி, மகள் என்று குடும்பத்தில் உள்ளவர்களைக் கூட நாத்திகர்களாக மாற்ற வழியில்லாத  இவர், ஊருக்கு பகுத்தறிவு உபதேசம் செய்வது கேவலம்.

*காவிரியில் கர்நாடகா உள்ளிட்ட அண்டை மாநிலங்கள்  தமிழகத்துக்கு நீர் தராமல் பிரச்னை செய்யும் போது நடிகர் சங்கம் சார்பில் நடைபெறும் நிகழ்வுகளில் தாட் பூட்டென பேசி சீன் போடுவார். உண்மையான தமிழுணர்வு இருந்தால் மலையாளம், தெலுங்கு என அடுத்த மொழி படங்களில் நடிக்காமல் இருக்க வேண்டிதானே. பாகுபலியில் நடித்து தெலுங்கு தயாரிப்பாளரின் காசும் வேண்டும், தமிழ் மேடைகளில் சீன் போட்டு பேசி ‘புரட்சித் தமிழன்’ பட்டமும் வேண்டும். 

ஆக சொல்வது ஒன்று, செய்வது ஒன்று. தேர்தல் ஆதாயத்துக்காக கொள்கையை மறந்து, கூட்டணி வைக்கும் அரசியல்வாதிக்கும் இவருக்கு என்ன வித்தியாசம்?

*அட ஒரு நடிகனாகவாவது தமிழக சமுதாயத்துக்கு நல்லது செய்திருக்கிறாரா? என்றால் அதுவும் இல்லை. பானுபிரியா, குஷ்பு, சுகன்யா, தேவயானி என்று ஏகப்பட்ட நடிகைகளை புரட்டி எடுத்து சீன் புரட்சி செய்தவர்தான் நம்ம சத்யராஜ். வில்லாதி வில்லனில் நக்மாவோடும், பிரம்மாவில் குஷ்புவுடனும் இவர் ஆடிய பாட்டுக்களை பார்த்தால் ஷகிலாவின் பிட்டு படம் தோத்துடும் போங்க. 

*பாகுபலி பட ரிலீஸுக்காக கன்னட மக்களிடம் மன்னிப்பு கேட்டு மானத்தை இறக்கி வெச்ச தன்மான சிங்கம்தான் நம்ம சத்யராஜ்! அட நாங்களும் தெரியாமத்தான் கேக்குறோம்...என்ன கணக்குல இந்தாளப் போயி ‘புரட்சி தமிழன்’ன்னு கூவுறீங்க?

*சினிமா மூலமா தமிழ்நாட்டை கெடுத்தது பத்தாதுன்னு கண்ட கண்ட விளம்பரங்கள்ளேயும் நடிச்சு கல்லா கட்டுறவர்தான் சத்யராஜ். தான் விளம்பரப்படுத்துற பொருள், நிறுவனமெல்லாம் உண்மையானதுதானா அப்படிங்கிற கவலையெல்லாம் அண்ணனுக்கு கிடையவே கிடையாது. தன் கல்லா நிரம்புனா சரி. 

பல நடுத்தர மக்களோட வயித்துல அடிச்ச, சீட்டிங் தொழிலான ஈமு கோழி விளம்பரத்துல நடிச்சவருன்னா, இவரோட லட்சணத்த பார்த்துக்கோங்க....இதுக்கெல்லாம் நியாயமா, நேர்மையா பதில் சொல்லிட்டு மறுபடியும் நீங்க திராவிட மேடைகள்ள ஏறி பேசலாம் சத்யராஜ். அப்புறம் ஒத்துக்குறோம் நீங்க புரட்சியான ஆள்தான்னு. 

தமிழக முன்ன மாதிரியில்ல, உங்க கேரக்டரை நல்லாவே புரிஞ்சு வெச்சிருக்கிறோம்!” என்று போட்டுப் பொளந்துள்ளார்கள். 
இந்த பதிவுகள் வைரலாகிக் கொண்டிருக்கின்றன. என்ன சொல்லப் போகிறார் சத்யராஜ்!

click me!