
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஒரு படத்தில் நடிக்க ஆரம்பித்தாலே, அந்த திரைப்படம் வெளிவரும் வரை அந்த திரைப்படம் குறித்து தினமும் புது புது தகவல்கள் வெளிவந்து கொண்டு தான் இருக்கும்.
சமீபத்தில் இந்த திரைப்படத்தில் ரஜினிக்கு வில்லனாக "நானா படேகர்" நடிப்பதாக தகவல் வெளிவந்தது இதை தொடர்ந்து ரஜினிக்கு மனைவியாக நடிக்க உள்ள நடிகை குறித்து முக்கிய தகவல் தற்போது வெளிவந்துள்ளது.
1990 களில் முன்னணி கதாநாயகியாக நடித்த "ஈஸ்வரி ராவ்" காலா திரைப்படத்தில், கரிகாலனாக நடிக்கும் ரஜினிக்கு மனைவியாக நடிக்கவிருப்பதாக தெரியவருகிறது.
மேலும் ஏற்கனவே இந்த படத்தில் கமிட் ஆகியுள்ள "ஹுமா குரோஷி" ரஜனியின் தோழியாக நடிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் இந்த படத்தில், சமுத்திரகனி, சம்பத், பங்கஜ் திரிபாதி உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.
மும்பையில் முதல் கட்ட படப்பிடிப்பில் நடித்து முடித்துள்ள ரஜினிகாந்த் மீண்டும் ஜூன் மாதம் 24 தேதி சென்னையில் நடக்கும் படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.