
கடந்த வருடம் இயக்குனர் நித்தேஷ் திவாரி இயக்கத்தில் நடிகர் அமீர்கானின் நடித்த தங்கல் படத்தில் சிறுவயது மல்யுத்த வீராங்கனையாக நடித்திருந்த காஷ்மீரி நடிகை ஜயிரா வாசிம் பயணம்செய்த கார் விபத்தில் சிக்கி, ஏரிக்குள் விழுந்தது. ஆனால் எவ்வித காயங்களும் இல்லாமல் பத்திரமாக மேற்கப்பட்டார்.
அமீர்கானின் தங்கல் படத்தில் சிறுவயது மல்யுத்த வீராங்கனையாக கீதாகுமாரி போகட் என்ற பாத்திரத்தில் நடித்து இருப்பவர் ஜயிரா வாசிம். இவரின் நடிப்பு அந்ததிரைப்படத்தில் அனைவரையும் கவர்ந்தது, அந்த அளவுக்கு உண்மையான மல்யுத்த வீராங்கனையாக மாறி இருப்பார்.
இந்நிலையில், நடிகை ஜயிரா வாசிம், வியாழக்கிழமை காரில் ஸ்ரீநகர் சென்று கொண்டு இருந்தார். அப்போது தால் ஏரி அருகே போலேவார்டு சாலையில் வந்தபோது, கார் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து ஏரிக்குள் பாய்ந்தது. இதில் காருக்குள் இருந்த நடிகை ஜயிரா வாசிம் காரில் சிக்கிக்கொண்டார்.
இதைப்பார்த்த, உள்ளூர் வாசிகள் உடனடியாக மீட்புப்பணியில் ஈடுபட்டு காருக்குள் சிக்கி இருந்த நடிகை ஜயிரா வாசிம், டிரைவரை மீட்டனர். இதில் நடிகை ஜயிரா வாசிமுக்கு எந்தவிதமான காயமும் ஏற்படவில்லை, ஆனால், ஜயிரா வாசிமின் டிரைவருக்கு காயம் ஏற்பட்டது. இதையடுத்து, அவர் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.