2019ம் ஆண்டிற்கான டாப் 10 தொலைக்காட்சி பிரபலங்கள்... முதலிடம் யாருன்னு தெரிஞ்சா?... ஆடிப்போயிடுவீங்க, ஆடி...!

Kanimozhi Pannerselvam   | Asianet News
Published : Jan 30, 2020, 06:09 PM IST
2019ம் ஆண்டிற்கான டாப் 10 தொலைக்காட்சி பிரபலங்கள்... முதலிடம் யாருன்னு தெரிஞ்சா?... ஆடிப்போயிடுவீங்க, ஆடி...!

சுருக்கம்

அதில் ரசிகர்களிடம் அவருக்கு உள்ள வரவேற்பு மற்றும் பிரபலம் ஆகியவற்றை கணக்கில் கொண்டு டாப் 10 பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. 

ஆண்டுதோறும் வெள்ளித்திரையிலும், சின்னத்திரையிலும் சிறந்து விளங்குபவர்களை பட்டியலிட கருத்துக்கணிப்பு நடத்தப்படுகிறது. அந்த வகையில் தொலைக்காட்சியில் சிறந்து விளங்கும் பெண்கள் குறித்து, பிரபல ஆங்கில பத்திரிக்கை ஒன்று வருடா, வருடம் கருத்துக்கணிப்பு நடத்தி வருகிறது. அதில் ரசிகர்களிடம் அவருக்கு உள்ள வரவேற்பு மற்றும் பிரபலம் ஆகியவற்றை கணக்கில் கொண்டு டாப் 10 பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. 

அந்த பட்டியலில், இடம் பெற்றுள்ளவர்கள் எல்லாருமே நாள்தோறும் நாம் தொலைக்காட்சியில் பார்த்து பழக்கப்பட்ட முகங்கள் தான். பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3-யில் கலந்து கொண்ட மூன்று பெண் போட்டியாளர்கள் இடம் பிடித்துள்ளனர.  ஆண்டுதோறும்  முதலிடத்தில் இருக்கும் தொகுப்பாளினி திவ்ய தர்ஷினி இந்த வருடம் மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். 

இந்த பட்டியலில் பிக்பாஸ் போட்டியில் கலந்து கொண்ட இலங்கையை சேர்ந்த பெண் செய்திவாசிப்பாளர் லாஸ்லியா முதலிடத்தை பிடித்துள்ளார். இரண்டாவது இடத்தை செய்தி வாசிப்பாளராக இருந்து, தற்போது சீரியல்களில் நடித்து வரும் சரண்யாவும், 3வது இடத்தை விஜய் டி.வி. தொகுப்பாளினி திவ்யதர்ஷினியும், 4வது இடத்தை பிக்பாஸ் புகழ் சாக்‌ஷி அகர்வாலும், 7வது இடத்தை பிக்பாஸ் அபிராமியும் பிடித்துள்ளனர். 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

தமிழ் சினிமாவில் பாக்ஸ் ஆபிஸில் கள்ளாகட்டிய டாப் 3 படங்கள் பட்டியல்: லேட்டஸ்ட் கோலிவுட் அப்டேட்!
2025ல் சாங்க்ஸில் பட்டைய கிளப்பிய டாப் 5 பாடல்கள்; ஓ இந்த பாடல் தான் டாப்பா?