
தமிழில் வெளியான விளையாட்டு தொடர்பான பல்வேறு படங்களுக்கும் மசூடம் சூட்டும் வகையில் ‘சார்பட்டா பரம்பரை’ திரைப்படம் பாராட்டுக்களை குவித்து வருகிறது. பா.ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் உருவான ‘சார்பட்டா பரம்பரை’ திரைப்படம் கடந்த வாரம் அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியானது. இந்தப் படத்தில், துஷாரா விஜயன், கலையரசன், பசுபதி மற்றும் சந்தோஷ் பிரதாப் உள்ளிட்ட பலரும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர் என்பதை விட வாழ்ந்துள்ளனர் என்றும் சொல்லும் அளவிற்கு அசத்தியிருந்தனர்.
விளையாட்டு சம்பந்தமான படங்களை எடுப்பது என்பது எப்போதுமே இயக்குநர்களுக்கு மிகப்பெரிய சவாலான விஷயம். ஆனால் இயக்குநர் பா.ரஞ்சித் 1970களுக்கு பிற்பகுதியில் வடசென்னையில் பிரபலமாக இருந்த பாக்ஸிங் கலாச்சாரத்தை கண்முன் காட்டியுள்ளதாக ரசிகர்கள் சோசியல் மீடியாவில் புகழ்ந்து வருகின்றனர். கபிலன், ரங்கன் வாத்தியார், வெற்றிச்செல்வன், வேம்புலி, டான்சிங் ரோஸ், மாரியம்மா, டாடி என பல்வேறு கதாபாத்திரங்கள் மக்கள் மனதில் நீங்காமல் இடம்பிடித்துள்ளது.
ரசிகர்களை விடவும், திரையுலகைச் சேர்ந்த நடிகர்கள் சூர்யா, சிவகார்த்திகேயன், நாசர் உள்ளிட்டோர் ட்விட்டரில் பா.ரஞ்சித் மற்றும் ஆர்யாவை வாழ்த்தியும், புகழ்ந்தும் பதிவிட்டு வருகின்றனர். தமிழ் ரசிகர்களை மட்டுமல்லாது பிற மொழியைச் சேர்ந்தவர்களையும் ‘சார்பட்டா திரைப்படம்’ கவர்ந்துள்ளது என்பது சமீபத்தில் நிரூபணமாகியுள்ளது. யூ-டியூப் ரிவ்யூ-வில் ஏற்கனவே தமிழ் சேனல்கள் சார்பட்டா திரைப்படத்தை ‘ஆஹா... ஓஹோ...’ என பாராட்டி வருகின்றனர். தற்போது மொழியைக் கடந்தும் இந்தி மற்றும் இங்கிலீஷ்காரர்களையும் ‘சார்பட்டா பரம்பரை’ திரைப்படம் கவர்ந்திழுத்துள்ளது.
‘சார்பட்டா பரம்பரை’ திரைப்படம் வெளியான அதே அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் ஜூலை 16ம் தேதி ‘தூஃபான்’ என்ற இந்தி திரைப்படம் வெளியானது. இந்த திரைப்படமும் குத்துச் சண்டை தொடர்பானது தான் என்றாலும், இந்திக்காரர்களிடையே ‘சார்பட்டா பரம்பரை’ திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அதேபோல் அமேசான் ப்ரைம் மூலமாக ‘சார்பட்டா பரம்பரை’ படத்தைக் கண்டு ரசித்த வெளிநாட்டுக்காரர்கள் பலரும் படம் குறித்த தங்களது விமர்சனங்களை யூ-டியூப் மூலமாக பதிவு செய்து வருகின்றனர். எதற்கொடுத்தாலும் ஹாலிவுட், பாலிவுட் மாதிரி தமிழில் படமில்லை என அலுத்துக் கொண்டவர்கள், ஆச்சர்யப்படும் வகையில் வெள்ளைக்காரர்களும், இந்திக்காரர்களும் கூட சார்பட்டா பரம்பரை படத்தை பாராட்டி வருவது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.