
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் பொங்கல் ஸ்பெஷல்லாக, ஜனவரி 9 ஆம் தேதி வெளியான திரைப்படம், 'தர்பார்'.
இந்தியாவில் மட்டும் 4000 ஆயிரம் திரையரங்கங்களிலும், உலகம் முழுவதும் மொத்தம் 7000 ஆயிரம் திரையரங்கங்களிலும் வெளியிடப்பட்டது.
கலவையான விமர்சனங்களை பெற்ற போதிலும், வசூலில் குறைவில்லாமல் தர்பார் ஓடிகொண்டிப்பதாக தெரிவிக்கின்றனர் திரையரங்க உரிமையாளர்கள்.
இந்நிலையில், இந்த படத்தில் இடம்பெற்றுள்ள 'டும் டும்' வீடியோ பாடல் போகி விருந்தாக, இன்று சரியாக 4 மணிக்கு, தமிழ்,தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகும் என லைக்கா நிறுவனம் தெரிவித்திருந்த நிலையில், தற்போது இந்த படத்தின் பாடல் வெளியாகி அனைவராலும் ரசிக்கப்பட்டு வருகிறது. இதில், நயன்தாராவை எப்படி ஸ்டைலில் மயக்குகிறார் என்பதை நீங்களே பாருங்கள்...
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.