கையில் துப்பாக்கியுடன் ஸ்டைலாக போஸ் கொடுத்த துல்கர் சல்மான்; 'ஐ ஆம் கேம்' ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

Published : Nov 28, 2025, 07:29 PM IST
Dulquer Salmaan Starring I Am Game First Look Poster Released Just Now

சுருக்கம்

I Am Game First Look Poster Released : துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகி வரும் ஐ ஆம் கேம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. இந்தப் படத்தை இயக்குநர் நஹாஸ் ஹிதயாத் இயக்குகிறார்.

ஐ ஆம் கேம் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்

மலையாள சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவரான துல்கர் சல்மான் நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் ஐ ஆம் கேம். இந்த படத்தை இயக்குநர் நஹாஸ் ஹிதயாத் இயக்குகிறார். இந்த நிலையில் தான் இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. இதில், ஸ்டைலான மாஸ் லுக்கில் துல்கர் சல்மான் காட்சி தருகிறார். மேலும், துப்பாக்கி ஏந்திய நிலையில் கையில் ரத்தக்கறையுடன் இந்த போஸ்டரில் காணப்படுகிறார். முழுக்க முழுக்க ஆக்‌ஷன் கதையை மையபடுத்தி இந்தப் படம் உருவாகி வருகிறது. இந்தப் படம் இவரது 40ஆவது படம் என்பது குறிபிடத்தக்கது.

துல்கர் சல்மான் நடிக்கும் மலையாளப் படம்

நீண்ட இடைவெளிக்குப் பிறகு துல்கர் சல்மான் நடிக்கும் மலையாளப் படம் என்பதால், 'ஐ ஆம் கேம்' மீது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. வேஃபெரர் ஃபிலிம்ஸ் பேனரில் துல்கர் சல்மானே இப்படத்தை தயாரிக்கிறார். சஜீர் பாபா, இஸ்மாயில் அபுபக்கர், பிலால் மொய்து ஆகியோர் திரைக்கதை எழுதியுள்ளனர். ஆதர்ஷ் சுகுமாரன் மற்றும் ஷஹபாஸ் ரஷீத் வசனம் எழுதியுள்ளனர்.

துல்கர் சல்மானுடன் ஆண்டனி வர்கீஸ், தமிழ் நடிகர் மற்றும் இயக்குநரான மிஷ்கின், கதிர், பார்த் திவாரி ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். தென்னிந்தியாவின் புகழ்பெற்ற சண்டை இயக்குநர்களான அன்பறிவ் மாஸ்டர்ஸ் இப்படத்திற்கு சண்டைக் காட்சிகளை அமைக்கின்றனர். ஆக்‌ஷனுக்கு அதிக முக்கியத்துவம் உள்ள ஒரு பெரிய பட்ஜெட் படமாக 'ஐ ஆம் கேம்' உருவாகிறது. RDX படத்திற்குப் பிறகு, நஹாஸ் இயக்கும் இப்படத்திலும் அன்பறிவ் மாஸ்டர்ஸ் சண்டை இயக்குநர்களாகப் பணியாற்றுகின்றனர். ஜேக்ஸ் பிஜாய் இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார்.

 

 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Articles on
click me!

Recommended Stories

மதகஜராஜா முதல் டூரிஸ்ட் ஃபேமிலி வரை... 2025-ல் சர்ப்ரைஸ் ஹிட் அடித்த டாப் 5 தமிழ் மூவீஸ்
ரீ-ரிலீஸுக்கு ரெடியான ரஜினிகாந்தின் பக்கா மாஸ் படம் ‘படையப்பா’... எப்போ வெளியாகிறது தெரியுமா?