
'சோலோ' படத்தில் 11 இசையமைப்பாளர்கள், 15 பாடல்கள் மற்றும் மூன்று ஒளிப்பதிவாளர்கள் என்ற அறிவிப்பு எல்லோரின் கவனத்தையும் சட்டென்று ஈர்த்தது.பெஜாய் நம்பியார் இயக்கத்தில், துல்கர் சல்மான் கதாநாயகனாக நடித்துள்ள இப்படத்தின் கதாநாயகிகள் பற்றிய அறிவிப்பு தற்பொழுது வெளிவந்து ரசிகர்களிடையே உள்ள ஆர்வத்தை மேலும் கூட்டியுள்ளது.
நான்கு கதாபாத்திரங்களில் துல்கர் தோன்றவுள்ள 'சோலோ' படத்தில் நேஹா சர்மா, சாய் தன்ஷிகா, சுருதி ஹரிஹரன் மற்றும் ஆர்த்தி வெங்கடேஷ் ஆகியோர் அவருக்கு ஜோடியாக நடித்துள்ளனர் என்ற செய்தியை துல்கரே அவரது சமூக வலைத்தளத்தில் அறிவித்துள்ளார்.
கதாநாயகிகளுடனான காதல் காட்சிகளில் ஜொலிப்பதில் பெயர் போன துல்கர் சல்மானுக்கு இப்படத்தில் நான்கு கதாநாயகிகள் என்ற அறிவிப்பு ரசிகர்களிடையே பெரும் ஆர்வத்தையும் எதிர்பார்ப்பையும் கூட்டியுள்ளது.
'The Refex Group' சார்பில் 'Refex Entertainment' இப்படத்தை 'Getaway Films' உடன் சேர்ந்து தயாரித்துள்ளது. 'சோலோ' படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் மிக வேகமாக நடந்துக்கொண்டிருக்கின்றது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.