ரீமேக் செய்யப்படும் 'திருஷ்யம் 2'...! வெளியான அதிகார பூர்வ அறிவிப்பு..!

By manimegalai aFirst Published May 4, 2021, 7:18 PM IST
Highlights

மலையாள சூப்பர் ஹிட் திரைப்படமான ‘திரிஷ்யம்’-ன் இரண்டாம் பாகமான ‘திரிஷ்யம்-2 ’ கடந்த சமீபத்தில் ஓடிடி தளத்தில் வெளியாகி பெரும் பாராட்டுதல்களையும், வரவேற்பையும் பெற்ற நிலையில், இப்படத்தின் ஹிந்தி ரீமேக் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
 

மலையாள சூப்பர் ஹிட் திரைப்படமான ‘திரிஷ்யம்’-ன் இரண்டாம் பாகமான ‘திரிஷ்யம்-2 ’ கடந்த சமீபத்தில் ஓடிடி தளத்தில் வெளியாகி பெரும் பாராட்டுதல்களையும், வரவேற்பையும் பெற்ற நிலையில், இப்படத்தின் ஹிந்தி ரீமேக் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

‘திரிஷ்யம்’ 2 திரைபபடம் வெற்றிபெற்றதில் இருந்து, அதனை மற்ற மொழிகளில் ரீமேக் செய்ய, திரையுலகினர் ஆர்வம் காட்டி வருகிறார்கள். அந்த வகையில். தெலுங்கில் ரீமேக் செய்த அதே குழு, இரண்டாம் பாகத்தின் ரிமேக்கையும் தயாரிக்கிறது. ஜீத்து ஜோசப் இயக்கத்தில், வெங்கடேஷ், மீனா, நதியா, நரேஷ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். 

இப்படத்தின் பூஜை மார்ச் மாதம் போடா பட்ட நிலையில், மார்ச் 5 ஆம் தேதி முதல் படப்பிடிப்பு தொடங்கி, தொடர்ந்து 50 நாட்கள் நடைபெற உள்ளதாகவும் படக்குழு அறிவித்திருந்தது. இதயடுத்து தற்போது ஹிந்தியில் 'திரிஷ்யம்' படம் ரீமேக் ஆக உள்ளது குறித்த தகவல் அதிகார பூர்வமாக வெளியாகியுள்ளது.

இந்த படத்தின் உரிமையை பனோரமா ஸ்டூடியோ இன்டர்நேஷனல் என்ற நிறுவனம் கைப்பற்றி உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் ரீமேக் உரிமையை பெற்றதில் மகிழ்ச்சி அடைவதாகவும் இந்த படத்தின் படப்பிடிப்பை விரைவில் தொடங்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். 'த்ரிஷ்யம்' படத்தின் ஹிந்தி ரீமே முதல் பாகத்தில்   அஜய் தேவ்கான், ஸ்ரேயா சரண், தபு ஆகியோர் நடித்த நிலையில் இரண்டாம் பாகத்தில் அவர்களே தொடர்ந்து நடிப்பார்களா? அல்லது வேறு யாரேனும் நடிப்பார்களா என்கிற தகவல் வெளியாகவில்லை.

அதே போல் 'திரிஷ்யம்’ திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கான ‘பாபநாசம்’, ஜீத்து ஜோசப் இயக்கத்தில், கமல் ஹாசன் மற்றும் கௌதமி உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகி வேற லெவல் வெற்றி பெற்ற நிலையில், திருஷ்யம் 2 படத்திலும், கமல்ஹாசன் நாயகனாக நடிப்பாரா என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. 

click me!