நாடக நடிகர்கள் அசாத்திய திறமை கொண்டவர்கள் - புகழ்ந்து தள்ளிய சிவகார்த்திகேயன்…

 
Published : Jun 13, 2017, 09:48 AM ISTUpdated : Sep 19, 2018, 12:44 AM IST
நாடக நடிகர்கள் அசாத்திய திறமை கொண்டவர்கள் - புகழ்ந்து தள்ளிய சிவகார்த்திகேயன்…

சுருக்கம்

Dramatic actors with inexperienced talent - praised Sivakarthikeyan ...

நாடக நடிகர்கள் அசாத்திய திறமை வாய்ந்தவர்கள் என்று நாடக நடிகர்களை புகழ்ந்து தள்ளினார் நடிகர் சிவகார்த்திகேயன்.

நடிகர் சிவகார்த்திகேயன் இன்று தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத இளம் கதாநாயகனாக வளம் வருகிறார். இவரது படங்கள் வசூல் சாதனை செய்து வருவதால் இவரை வைத்துப் படம் எடுக்க இயக்குநர்களிடையே கடும் போட்டி நிலவுகிறது.

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லா வயதினரையும் தன்னுடைய ரசிகராக கொண்டிருக்கிறார்.

இவர் சமீபத்தில் நடிகர் ஒய்.ஜி.மகேந்திரன் நடத்திய 100-வது நாடகத்தின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

சிவகார்த்திகேயன் உடன் இயக்குநர் பாக்யராஜ், தம்பி ராமையா, காமெடி நடிகர் சதீஷ் ஆகியோரும் பங்கேற்றனர்.

நாடகம் முடிந்த பின்பு நடிகர் சிவகார்த்திகேயன் பேசியது:

“சினிமாவில் நடிகர், நடிகைகள் பலரும் கொடிக்கட்டி பறக்க காரணம் நாடகங்கள்தான். நாடகத்தில் இருந்து வந்தவர்கள்தான் மிகப்பெரிய இடத்தை பிடித்திருக்கின்றனர்.

அசாத்திய திறமை கொண்ட இவர்கள் அருகில் அமரவே கூச்சமாகவும், வெட்கமாகவும் இருக்கிறது” என்று தன்னடக்கத்துடன் நாடக நடிகர்கள் குறித்து புகழ்ந்து பேசினார்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

உயிர் போய் உயிர் வந்துருக்கு!" - பயங்கர கார் விபத்தில் சிக்கிய ரஜினி பட நடிகை நோரா ஃபதேஹி!
ஜவ்வா இழுக்கும் இயக்குநர்; ரொம்பவே ஒர்ஸ்ட்; சிறகடிக்க ஆசை சீரியலை கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்!