
தெலுங்கு முன்னணி நடிகரான ராஜசேகர், தமிழ் நாட்டைச் சேர்ந்தவர் என்ற போதிலும் தெலுங்கு படங்களில் நடித்து பிரபலமாகி அங்கேயே செட்டில் ஆனவர்.
தமிழில் இவர் 'இதுதாண்டா போலீஸ்' என்கிற படத்தில் மிகவும் ரிஸ்க் எடுத்து நடித்தவர். இவருக்கு தமிழை விட தெலுங்கில் அதிக ரசிகர்கள் உள்ளதால் தமிழ் படங்களில் பெரிதாக இவர் கவனம் செலுத்தவில்லை.
இந்நிலையில் இவர் நடித்த 'கருடா வேகா' படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடந்தது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இவர், தன்னுடைய படங்களில் அதிகம் நபர்களால் பார்க்கப்பட்ட படத்தின் டீசர் இது தான். ஏறக்குறைய 50 லட்சத்திற்கும் மேலானவர்கள் பார்த்துள்ளனர் என்று கூறி தனக்கு ஆதரவு கொடுக்கும் அனைவருக்கும் நன்றி கூறினார்.
இதைத் தொடர்ந்து பேசிய அவர், நான் இது வரை பட தயாரிப்புகளில் நிறைய இழந்துள்ளேன். சென்னையில் சொந்தமாக எனக்கிருந்த சொத்தையும் விற்று கூட பட தயாரிப்பில் போட்டு இழந்துள்ளேன். அதன் மதிப்பு கிட்டதட்ட 200 கோடி ரூபாய் இருக்கும் என்று கூறி மேடையிலேயே கதறி அழுதார்.
இவரை இவருடைய மனைவி ஒருவழியாக சமாதானம் செய்து அழைத்துச் சென்றார். இவர் மிகவும் பாசம் வைத்திருந்த அம்மா இறந்தது முதல் மிகவும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார் என்று அவருடைய மனைவி தெரிவித்தார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.