பிக்பாஸில் திடீர் டுவிஸ்ட்... இந்த வாரம் டபுள் எவிக்‌ஷன்!! முத்த சர்ச்சையில் சிக்கிய இருவரும் வெளியேற்றம்

Published : Dec 25, 2021, 09:35 PM IST
பிக்பாஸில் திடீர் டுவிஸ்ட்... இந்த வாரம் டபுள் எவிக்‌ஷன்!! முத்த சர்ச்சையில் சிக்கிய இருவரும் வெளியேற்றம்

சுருக்கம்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வார நாமினேஷனில் வருண், பிரியங்கா, அக்‌ஷரா, சிபி, பாவனி, நிரூப் ஆகிய ஆறு போட்டியாளர்கள் இடம்பெற்றிருந்தனர். 

தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் மிகவும் பிரபலமானது பிக்பாஸ் நிகழ்ச்சி. பரபரப்புக்கும், சர்ச்சைகளுக்கும் பஞ்சமில்லாத இந்நிகழ்ச்சி இதுவரை 4 சீசன்கள் முடிந்துள்ளது. முதல் சீசனில் ஆரவ், இரண்டாவது சீசனில் ரித்விகா, மூன்றாவது சீசனில் முகின் ராவ், நான்காவது சீசனில் ஆரி ஆகியோர் பிக்பாஸ் டைட்டிலை ஜெயித்தனர்.

தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியின் 5-வது சீசன் (BiggBoss 5) விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் இந்நிகழ்ச்சி 70 நாட்களை கடந்து இறுதிக்கட்டத்தை நோக்கி நகர்ந்து வருகிறது. பிக்பாஸ் நிகழ்ச்சியின் விதிப்படி ஒவ்வொரு வார இறுதியில் மக்கள் அளிக்கும் வாக்குகள் அடிப்படையில், குறைந்த வாக்குகளை பெற்ற போட்டியாளர் வெளியேற்றப்படுவார்.

அதன்படி இந்த வார நாமினேஷனில் வருண், பிரியங்கா, அக்‌ஷரா, சிபி, பாவனி, நிரூப் ஆகிய ஆறு போட்டியாளர்கள் இடம்பெற்றிருந்தனர். இதில் இன்றைய எபிசோடில் பிரியங்கா முதலாவதாக காப்பாற்றப்படுவதாகவும், அதன்பின்னர் சிபி மற்றும் பாவனி ஆகியோர் சேவ் ஆக உள்ளனர். 

மீதமிருக்கும் நிரூப், அக்‌ஷரா, வருண் ஆகிய மூவரில் இருந்து இந்த வார, இரண்டு பேரை வெளியேற்றி உள்ளனர். அதன்படி அக்‌ஷரா மற்றும் வருண் ஆகியோர் இந்த வாரம் எவிக்ட் ஆகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. திடீரென டபுள் எவிக்‌ஷன் என அறிவித்துள்ளது பிக்பாஸ் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இவர்கள் இருவரும் அண்மையில் முத்த சர்ச்சையில் சிக்கியது குறிப்பிடத்தக்கது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

பொள்ளாச்சி டூ அதிரப்பள்ளி... சினிமா படப்பிடிப்பால் உலகப் புகழ்பெற்ற டாப் 5 சுற்றுலாத் தலங்கள்!
Dare Devil : அஜித்தின் டேர் டெவில் படத்தில் இருந்து விலகிய மோகன்லால்... அவருக்கு பதில் இவரா?