விஐபி - 2 படத்தின் கேரள விநியோக உரிமையை யாரு வாங்கினா தெரியுமா?

First Published Aug 9, 2017, 9:41 AM IST
Highlights
Do you know who owned the Kerala distribution rights of VIP-2?


‘விஐபி 2’ படத்தின் கேரள விநியோக உரிமையை நடிகர் மோகன்லால் வாங்கியுள்ளார்.

தனுஷ், கஜோல், அமலாபால் உள்ளிட்ட பலர் நடித்த படம் ‘விஐபி - 2’. இந்தப் படம் இம்மாதம் 11-ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது.

விஐபி - 2 படத்தின் கேரள விநியோக உரிமையை ‘மாக்ஸ் லேப்’ மற்றும் ‘ஆசீர்வாத் சினிமாஸ்’ நிறுவனங்கள் இணைந்து வாங்கியுள்ளன.

இந்த நிறுவனங்கள் நடிகர் மோகன்லால் மற்றும் அவரது மேலாளர் பெரும்பாவூர் ஆண்டனி உடையது.

இதற்கு முன் இதே நிறுவனம்தான் ரஜினியின் ‘கபாலி’ படத்தையும் வாங்கியது. ‘கபாலி’யைத் தொடா்ந்து இந்த நிறுவனம் வெளியிடும் தமிழ்ப்படம் ‘விஐபி-2’

இந்தப் படத்தை கேரளாவில் 200-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியிட முடிவு செய்துள்ளனா்.

விஐபி-2 படத்தை மலேசியாவில் மட்டும் 550 திரையரங்குகளில் திரையிட உள்ளனர். இதுவரை எந்த ஒருதமிழ் படமும் மலேசியாவில் இவ்வளவு திரையரங்குகளில் வெளியானதில்லை. அதனால்தான் தனுஷ், கஜோல் உள்ளிட்ட படக்குழுவினர் அண்மையில் மலேசியா சென்று புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் ஒரேநாளில் இப்படத்தை வெளியிட திட்டமிட்டிருந்தனர். ஆனால் இப்போது தெலுங்கு, இந்தி ரிலீஸ் மட்டும் ஒரு வாரம் தள்ளிப் போகிறது என்பது கொசுறு தகவல்.

tags
click me!