ரஜினிகாந்தின் சம்பளம் எவ்வளவு தெரியுமா?: அம்மாடியோவ்! என வாய்பிளக்க வைக்கும் தகவல்கள்.

By Vishnu PriyaFirst Published Dec 28, 2018, 3:38 PM IST
Highlights

கபாலி தோல்வி, காலா ஃபெயிலியர், 2.0 எதிர்பார்த்த வசூலை ரீச் செய்யவில்லை!...ரஜினியின் கடந்த மூன்று படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் இதுதான். இதனால் அவரது மார்க்கெட்டும், சம்பளமும் சரிந்திருக்குமே? என்று யாராச்சும் கேட்டீங்க, பிய்ச்சுப்போடுவோம் பிய்ச்சு!

ரஜினிகாந்தின் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

கபாலி தோல்வி, காலா ஃபெயிலியர், 2.0 எதிர்பார்த்த வசூலை ரீச் செய்யவில்லை!...ரஜினியின் கடந்த மூன்று படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் இதுதான். இதனால் அவரது மார்க்கெட்டும், சம்பளமும் சரிந்திருக்குமே? என்று யாராச்சும் கேட்டீங்க, பிய்ச்சுப்போடுவோம் பிய்ச்சு!

அடுத்தடுத்து புக் ஆகிக் கொண்டிருக்கிறார் ரஜினி. பேட்ட ரிலீஸாகிய பின், ஏ.ஆர்.முருகதாஸுடன் இணையும் புதிய படத்தை துவங்க இருக்கிறார். அதற்கு அடுத்த படத்துக்கும் இப்போதே கதை கேட்டு வைத்துவிட்டார்! என்று தகவல்கள் தடதடக்கின்றன. சரி சூப்பர் ஸ்டாரை வைத்து படமெடுக்க ஆனானப்பட்ட ராஜமவுலியே ஆசைப்படும்போது, அல்லு சில்லுகளெல்லாம் துடிக்காதா என்ன? என்று கேலி பேசியவர்களுக்கு பதிலடியாக ராஜமவுலி ‘ட்ரிபிள் ஆர்’ ப்ராஜெக்டை முடித்துவிட்டு வந்ததும் ரஜினியுடன் இணைகிறார்! எனும் புது தகவல் கிளம்பியிருக்கிறது.  

அட அதெல்லாம் கிடக்கட்டும், இண்டஸ்ட்ரியை தெறிக்க விட்டிருக்கும் புது தகவல் என்ன தெரியுமா? அது ரஜினிகாந்தின் லேட்டஸ்ட் சம்பள நிலவரம் பற்றியதுதான். 

ஆம், 2.0 முதல் தலைவனின் சம்பளம் நூறு கோடியை தொட்டுவிட்டதாம். லைக்கா நிறுவனம் முன்பணமாக 50 சி கொடுத்துவிட்டது, இப்போது லோக்கல் மற்றும் ஓவர்சீஸ் வசூல் எல்லாவற்றையும் கூட்டிப்பார்த்து கணக்கு பண்ணிய ரஜினி ‘மீதி 50 சி எப்போ?’ என்றிருக்கிறாராம். கூடிய விரைவில் அது செட்டில் செய்யப்படும் என்கிறார்கள். 

இந்நிலையில் பேட்ட தயாரிப்பாளரும் இந்த சம்பளத்துக்கு ஓ.கே. சொன்னபிறகுதான் ப்ராஜெக்ட் கையெழுத்தானது என்கிறார்கள். 
‘2.0 உள்நாட்டில் பெரியளவில் வசூல் செய்யவில்லை என்பதால் லைக்கா நிறுவனம் அப்செட்’ என்று தகவல் பரவிக்கிடக்கிறது. இவர்கள் ரஜினிக்கு மீது 50சி யை முழுவதுமா செட்டில் செய்வார்களா? என்று சிலர் கேள்வி எழுப்ப, ‘அதை செட்டில் செய்துவிட்டே அடுத்த ப்ராஜெக்டையும் ரஜினியோடே செய்ய ஆசைப்படுகிறது லைக்கா! அந்தப் புதுப் படத்துக்கான சம்பளம் தனி கணக்கு’ என்று தகவல் வருகிறது.

ஆனால் ரஜினியின் தரப்போ ‘இதெல்லாம் ச்சும்மா! அவரை வெச்சு எத்தனையோ பரபரப்புகளை கெளப்பி சம்பாதிச்ச கோஷ்டி, இதையும் ஒரு வியாபாரமாக்குது.” என்று மறுக்கிறார்கள். தெருக்கோடியில் நிற்கும் ரஜினியின் ரசிகர்கள் அவரது புதுப்படம் ரிலீஸாகையில் ரெண்டாயிரம், மூவாயிரம் ரூபாய் கொடுத்து ஒரு டிக்கெட்டை எடுத்துப் படம் பார்க்கிறார்கள். அப்புறம் ஏன் ரஜினியின் சம்பளம் நூறு கோடியை தொடாது? என்கிறார்கள் சினிமா ஃபைனான்ஸியர்கள். 
தலைவா நீ ஆடு!

click me!