’நடிகர் விமெலும் இயக்குநர் சற்குணமும் என்னை மோசடி செய்யப்பார்க்கிறார்கள்’...கலகலக்கும் ‘களவாணி 2’ பஞ்சாயத்து...

Published : Apr 25, 2019, 04:57 PM IST
’நடிகர் விமெலும் இயக்குநர் சற்குணமும் என்னை மோசடி செய்யப்பார்க்கிறார்கள்’...கலகலக்கும் ‘களவாணி 2’ பஞ்சாயத்து...

சுருக்கம்

நடிகர் தன்னிடம் பணம் வாங்கிக்கொண்டு ஏமாற்றிவிட்டதாகவும் அதில் இயக்குநர் சற்குணத்துக்கும் பங்கு உண்டு என்றும் பிரபல விநியோகஸ்தர் சிங்காரவேலன் குற்றம் சாட்டியுள்ளார்.  

நடிகர் தன்னிடம் பணம் வாங்கிக்கொண்டு ஏமாற்றிவிட்டதாகவும் அதில் இயக்குநர் சற்குணத்துக்கும் பங்கு உண்டு என்றும் பிரபல விநியோகஸ்தர் சிங்காரவேலன் குற்றம் சாட்டியுள்ளார்.

களவாணி 2 படம் விமெல் ஓவியா நடிப்பில் இன்னும் ஒருசில தினங்களில் ரிலீஸாவதாக  இருந்த நிலையில் பிரபல விநியோகஸ்தரும் தயாரிப்பாளருமான சிங்காரவேலன் இந்த படத்தை வெளியிட நீதிமன்றம் மூலம் ஆறு வார இடைக்காலத் தடை பெற்றிருக்கிறார்.

இதுகுறித்து படத்தின் இயக்குனர் சற்குணம் வெளியிட்டுள்ள ஒரு வீடியோவில் இந்த படத்தை தான் தயாரித்துள்ளதாகவும், இயக்குனர் விமலுக்கும் தயாரிப்பாளர் சிங்காரவேலனுக்கும் இடையே உள்ள பணப்பிரச்சினை தொடர்பாக, 'களவாணி-2' படத்தை ரிலீஸ் செய்ய விடாமல் சிங்கார வேலன் இடைக்கால தடை வாங்கி உள்ளார் என்றும் குற்றம் சாட்டி ஒரு வீடியோ வெளியிட்டிருந்தார்.

ஆனால்அந்த வீடியோ வெளியான கொஞ்ச நேரத்திலேயே  உண்மையில் இது தன்னுடைய பணத்தில் தயாரிக்கப்பட்டது என்றும் விமலும் இயக்குநர் சற்குணமும் களவாணித்தனம் செய்கிறார்கள் என்கிறார்விநியோகஸ்தரும் தயாரிப்பாளருமான சிங்காரவேலன்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,’ பூபதி பாண்டியன் இயக்கத்தில் விமெல் நடித்த ‘மன்னர் வகையறா’ படத்துக்கு ஃபைனான்ஸ் செய்த வகையில் இன்றைய தேதி வரையில் விமல் எனக்கு 4.32 கோடி  ரூபாய் தரவேண்டி இருக்கிறது. ஆறு மாதத்திற்குள் அந்த தொகையை தந்து விடுவதாக விமல் கூறினார். ஆனால் கூறியபடி பணத்தை அவர் தரவில்லை. இந்தநிலையில் தான் ’களவாணி-2’ படம் 'வர்மன்ஸ்  புரொடக்சன்ஸ்' சார்பில் தயாராகி வருவதாக அறிவிப்பு வெளியானது. நான் இயக்குனர் சற்குணத்திடமும் விமலிடமும் ஏற்கனவே காப்பிரைட் அடிப்படையில் இந்த படத்தை எடுத்துக் கொடுப்பதாக ஒப்பந்தம் போட்டிருக்கிறீர்கள் என்றும் அதை மீறி இவ்வாறு விளம்பரப்படுத்துவது முறை அல்ல என்றும் பல முறை கூறியும் அவர்கள் இருவரும் அதை காதில் போட்டு கொள்ளவே மறுத்துவிட்டார்கள்.

இந்த படத்தின் உரிமை என்னிடம் தான் இருக்கிறது.. இயக்குனர் சற்குணம் இந்த படத்தை அவர் தயாரித்ததாக சொல்வது சுத்தமான பொய். என் பணத்தில் ஆரம்பிக்கப்பட்டு, ஆனால் என்னிடம் வாங்கிய பணத்தை கொடுக்காமல் ஏமாற்ற வேண்டும் என்கிற எண்ணத்தில் இயக்குனர் சற்குணமும் நடிகர் விமலும் சேர்ந்து திட்டமிட்டு நடத்திய நாடகம் என்று தான் நான் இதைக் கருதுகிறேன். எனக்குத் தரவேண்டிய பணத்தை மொத்தமாக செட்டில் செய்யவேண்டும். அல்லது படத்தை என்னிடம் ஒப்படைக்கவேண்டும். இதைத் தாண்டி சற்குணத்துக்கும் விமெலுக்கும் வேறு வழியே இல்லை’என்கிறார் சிங்காரவேலன்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

என்னுடைய சாவுக்கு நீ, உங்க அப்பா அம்மா தான் காரணம்; விவாகரத்து கேட்கும் சரவணன்: ஷாக்கான பாண்டியன்!
ஒசூரில் கடும் குளிரிலும் சால்வையை போர்த்திக் கொண்டு ஒத்திகை; இளையராஜாவின் செயலை வியந்த டீம்!