
மிஷ்கின் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள ‘சைக்கோ’படத்தின் ஒரு பாடல் சூப்பர் டூப்பர் ஹிட்டாகி இணையங்களில் வைரலாகி வரும் நிலையில் திமுக உடன்பிறப்புகள் இளையராஜாவுக்கு மறுவாழ்வு கொடுத்த இளைஞரணித் தலைவரே என்று பதிவிட்டு வருவதால் ராஜா ரசிகர்கள் கொந்தளித்துப்போய் உள்ளனர். முகநூலில் இந்த இருதரப்பினருக்கும் இடையில் நடக்கும் சண்டை, சச்சரவுகள்தான் முதலிடத்தில் உள்ளது.
கடந்த 18ம் தேதியன்று சைக்கோ படத்தின் சிங்கிள் பாடலான ‘உன்ன நெனச்சு நெனச்சு மெழுகா உருகிப்போனேனே’என்ற பாடல் வெளியிடப்பட்டது. இப்பாடலை ராஜாவின் இசையில் முதன்முதலாக சித் ஸ்ரீராம் பாடியிருந்தார். ராஜாவின் வழக்கமான மெலடிகளில் ஒன்றான அதை வழக்கம்போல் அவரது ரசிகர்கள் கொண்டாடித் தீர்த்துக்கொண்டிருக்க, இடையில் புகுந்த திமுக உடன்பிறப்புகள், நீண்ட நாட்களாக பட வாய்ப்பே இல்லாமல் இருந்த ராஜாவுக்கு வாய்ப்புக் கொடுத்து உதயநிதிதான் கைதூக்கி விட்டிருக்கிறார் என்பது போன்ற விஷமப் பதிவுகள் போட ஆரம்பித்தனர்.
அவ்வளவுதான் ‘ஸ்டார் மியூசிக்’என்பது போல் இரு தரப்பும் கட்டி உருள ஆரம்பித்துவிட்டனர். Andrew RS11 hrs...எக்ஸ்பயரி டேட் இல்லாத ஆர்மோனியம் எங்களோடது. எத்தனை வருஷம் ஆனாலும் டியூன்கள் வந்துட்டே இருக்கும்,. யப்பா இணைய உடன்பிறப்புகளா.. மூணு தலைமுறை திமுக குடும்பம் எங்களோடது. எனக்கும் ஓட்டுரிமை வந்ததிலிருந்து எந்த தேர்தல்லேயும் உதயசூரியன் தவிர எதுலேயும் குத்துனதில்ல. வாசுகி பாஸ்கர்க்கு கவுன்ட்டர் கொடுக்குறேன். .. உதய்ணாக்கு சொம்படிக்கிறேன்னு நீங்க எடுக்கும் வெர்பல் வாமிட்டுகளை பார்த்து எனக்கே காண்டாவுதுய்யா. போற வர்ற இடத்துலேயெல்லாம் உங்கள ஏன் வாயிலேயே மிதிக்கிறாய்ங்கன்னு இப்பத்தான் புரியுது...என்று திமுகவினரை ராஜா ரசிகர்கள் புரட்டி எடுக்க ஆரம்பித்துள்ளனர்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.