
நடிகை நயன்தாரா நேற்றைய தினம், தன்னுடைய பிறந்தநாளை வெகு விமர்சியாக கொண்டாடினார். இவருக்கு பல ரசிகர்கள் முதல் பிரபலங்கள் வரை அனைவரும் நயன்தாராவிற்கு தங்களுடைய வாழ்த்துக்களை மழை போல் பொழிந்தனர்.
இந்நிலையில் தற்போது நயன்தாராவின் பிறந்தநாளுக்காக, அவருடைய காதலர் விக்னேஷ் சிவன் செய்த செயல் பலருடைய பாராட்டுகளையும் பெற்று வருகிறது.
அதாவது, தன்னுடைய அன்பு காதலியின் பிறந்தநாளை மேலும் சிறப்பிக்கும் விதமாக, 1000 ஆதரவற்றோர் மற்றும் பார்வையற்றோர் இல்லங்களில் உணவு வழங்கி, நயன் பிறந்தநாளை சிறப்பித்துள்ளார் விக்னேஷ் சிவன். இது குறித்த சில புகைப்படங்களும், சமூகவலைத்தளத்தில் வெளியாகியுள்ளது. விக்னேஷ் சிவனின் இந்த செயலுக்கு நயன் ரசிகர்கள் உட்பட பலரும் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
நயன்தாரா தற்போது, விக்னேஷ் சிவன் தயாரிப்பில் உருவாகி வரும் 'நெற்றிக்கண்' படத்தில் நடித்து வருகிறார். மேலும் மூக்குத்தி அம்மன் படத்தில் நடிப்பதற்காக விரதம் இருந்து வருவதாகவும், செய்திகள் வெளியானது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.