இந்த கோரிக்கையை பிரதமர் மோடி நிறைவேற்ற வேண்டும்.... பெண்கள் பாதுகாப்பு குறித்து தாதா 87 இயக்குநரின் பதிவு...!

Kanimozhi Pannerselvam   | Asianet News
Published : Oct 09, 2020, 08:06 PM ISTUpdated : Oct 09, 2020, 08:11 PM IST
இந்த கோரிக்கையை பிரதமர் மோடி நிறைவேற்ற வேண்டும்.... பெண்கள் பாதுகாப்பு குறித்து தாதா 87 இயக்குநரின் பதிவு...!

சுருக்கம்

அந்த பதிவில், "பெண்களை அனுமதி இன்றி தொடுவது சட்டப்படி குற்றம் "என்று பதிவு செய்த வீடியோ இதை போல் நம் நாட்டில்  வெளிவரும் படங்களில் இடம் பெற எங்கள் பாரத பிரதமர் மோடி அவர்களை அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார். இந்த யோசனை சினிமா வட்டாரத்தில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. 

உ.பி.யில் அடுத்தடுத்து இரு இளம் பெண்கள் கொடூரமாக பாலியல் வன்கொடுமை செயப்பட்டு கொலையுண்ட சம்பவம் நாட்டையே உலுக்கியது. குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உறுதி அளித்துள்ளார். இந்நிலையில் பப்ஜி, பவுடர், தாதா 87 போன்ற படங்களை இயக்கிய இயக்குநர்  விஜய் ஸ்ரீ பாரத பிரதமர் மோடி அவர்களுக்கு புதுமையான கோரிக்கை ஒன்றை வைத்துள்ளார். மத்திய தணிக்கைக்குழுவின் ஆலோசனைப்படி திரைப்படங்கள் துவங்குவதற்கு முன் மது குடிப்பதும். சிகரெட் பிடிப்பதும் குற்றம் என்ற வாசகங்கள் டைட்டில் கார்டில்  கட்டாயம் பதிவிடப்பட வேண்டும். இந்நாள் வரை அந்த பதிவும் திரைப்படம் துவங்குவதற்கு முன் பதிவிடப்பட்டு வருகிறது.

 இதை கருத்தில் கொண்டு பெண்களுக்கு எதிராக ஏற்படும் பாலியல் குற்றச்சம்பவங்களுக்கு எதிரான வாசகம் 2019 மார்ச் 1 வெளியான ”தாதா87” படத்தின் டைட்டில் கார்டில், “பெண்களை அனுமதி இன்றி தொடுவது சட்டபடி குற்றம்” என்ற  வாசகத்தை  உலக சினிமா வரலாற்றில் முதல் முறையாக பதிவிட்டோம்.தற்சமயம் நாட்டை கண்ணீரில் ஆழ்த்திய ஹாரித்துவார் சம்பவம் நம் தேசத்தின் மகள் கொடூராமாக தாக்கப்பட்டு தீயில் கருகிய செய்தி அறிந்து அதிர்ச்சி அடைந்தோம்.

. எங்கள்  “பொல்லாத உலகில் பயங்கர கேம்” படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பில் ஒரு சில கயவர்களால் பெண் ஒருத்தி சிதைக்கப்பட்டு, எரிக்கப்பட்ட காட்சியையும், தொடர்ந்து அந்த கயவர்களுக்கு கொடூரமான தண்டனை கொடுக்கப்படுவதையும்  படமாக்கியிருக்கிறோம். தாதா87 படத்தில்  சாருஹாசன் பேசிய பெண்களை தொட்டால்  கொளுத்துவேன் என்ற வசனம் அனைத்து தரப்பு மக்களும் ஏற்றுக் கொண்டனர் என்பதை திரைப்பட வெற்றி பதிவு செய்தது. இன்று பல நாடுகளில் சட்டமானது.


பெண்களுக்கு ஏற்படும்  வன்முறை சம்பவங்களுக்கு கடுமையான தண்டனையும், சட்டமும் மட்டுமே அரணாக இருக்கும். தவறு இழைத்தவர்கள் மீது மத்திய அரசும் மாநில அரசும் இந்திய நீதித்துறையும் நிச்சயம் தண்டனை வழங்கும் என்ற  நம்பிக்கை உள்ளது என அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்த அவர், தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோவுடன் கோரிக்கை வைத்துள்ளார். 

அந்த பதிவில், "பெண்களை அனுமதி இன்றி தொடுவது சட்டப்படி குற்றம் "என்று பதிவு செய்த வீடியோ இதை போல் நம் நாட்டில் 
வெளிவரும் படங்களில் இடம் பெற எங்கள் பாரத பிரதமர் மோடி அவர்களை அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார். இந்த யோசனை சினிமா வட்டாரத்தில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

விஜய்யின் வளர்ச்சியை 28 வருடங்களுக்கு முன்பே கணித்து ஆரூடம் சொன்னவர்... யார் இந்த மோகன்ராஜ்?
கதிரை அடிக்க பாய்ந்த ஞானம்.. எதிரிகளாக மாறும் தம்பிகள்; தடாலடி முடிவெடுத்த குணசேகரன் - எதிர்நீச்சல் தொடர்கிறது