நிலமோசடி விவகாரம்: நடிகர் சூரிக்கு மத்திய குற்றப்பிரிவு போலீசார் சம்மன்...!

By Kanimozhi PannerselvamFirst Published Oct 9, 2020, 7:44 PM IST
Highlights

அதன்படி நடிகர் சூரி 2.7 கோடி ரூபாய்க்கு மோசடி புகார் கொடுத்துள்ளதால் இந்த வழக்கும் மத்திய குற்றப்பிரிவு போலீசாரின் விசாரணைக்கு மாறியுள்ளது.

முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வரும் காமெடி நடிகர் சூரி தனது முதல் பட ஹீரோவான விஷ்ணு விஷால் தந்தை மீது அளித்துள்ளது கோலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நகைச்சுவை நடிகர் சூரி சமீபத்தில் சென்னை காவல் ஆணையாளர் மகேஷ் குமார் அகர்வாலை சந்தித்து புகார் மனு அளித்திருந்தார். அதில் தனக்கு நிலம் வாங்கி தருவதாக கூறி ரூ. 2.70 கோடி மோசடி நடந்துள்ளதாக புகார் அளித்தார். அதில் முன்னாள் தீயணைப்புத்துறை டி.ஜி.பியும் நடிகர் விஷ்ணு விஷாலின் தந்தையுமான ரமேஷ் குடவாலா மற்றும் தயாரிப்பாளர் அன்பு வேல் ராஜன் மீது புகார் கூறப்பட்டுள்ளது. 

இதையடுத்து நடிகர் சூரி அளித்த புகாரின் அடிப்படையில் நீதிமன்ற உத்தரவின் பேரில் அடையார் காவல் நிலையத்தில் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஆனால் இதை முற்றிலும் மறுத்துள்ள விஷ்ணு விஷால் தனது தரப்பு விளக்கம் குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் சூரி உள்நோக்கத்துடன் பொய் புகார் கொடுத்திருப்பதாகவும், உண்மையை சட்டப்படி நிரூபிப்போம் என்றும் தெரிவித்தார். மேலும் உண்மை தகவல்களுடன் மட்டுமே ஊடகங்கள்  செய்தி வெளியிட வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்திருந்தார். 

 

இதையும் படிங்க: சொக்க வைக்கும் குட்டி சிரிப்பு... அழகு மகள் ஐலாவின் போட்டோக்களை வெளியிட்ட ஆல்யா மானசா...!

பண மோசடி புகார்களை பொறுத்தவரை 50 லட்சத்திற்கு மேல் புகார் கூறப்பட்டால் அந்த வழக்கை மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரிப்பார்கள். அதன்படி நடிகர் சூரி 2.7 கோடி ரூபாய்க்கு மோசடி புகார் கொடுத்துள்ளதால் இந்த வழக்கும் மத்திய குற்றப்பிரிவு போலீசாரின் விசாரணைக்கு மாறியுள்ளது. மேலும் நடிகர் சூரி கொடுத்த புகார் தொடர்பாக விசாரிப்பதற்காக வரும் அக்டோபர் 29ம் தேதி விசாரணைக்கு ஆஜராகும் படியும் மத்திய குற்றப்பிரிவு போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர். 
 

click me!