தோனி பாரத பிரதமர், நயன்தாரா தமிழக முதல்வர்...விக்னேஷ் சிவனின் விபரீத வேண்டுதல்

Published : Nov 12, 2018, 11:32 AM IST
தோனி பாரத பிரதமர், நயன்தாரா தமிழக முதல்வர்...விக்னேஷ் சிவனின் விபரீத வேண்டுதல்

சுருக்கம்

கடந்த நாலைந்து வருடங்களாகவே நயன்தாராவில் காதலர் என்கிற போஸ்ட்டில் பசைபோட்டு ஸ்ட்ராங்காக அமர்ந்திருக்கும் இயக்குநர் விக்னேஷ் சிவன் நம்ம தல கேப்டன் தோனியின் தீவிர வெறியரும் கூட. தோனியை டீமை விட்டுத்தூக்கவேண்டாம். சின்னதாய் ஒரு ரெஸ்ட் கொடுத்தால் கூட ‘நீங்க நாசமாப்போவீங்க’ என்று இந்திய கிரிக்கெட் வாரியத்தை மண்ணை அள்ளித்தூற்றுபவர்.

ஒருமுறை மே.இ.தீவுகள், ஆஸ்திரேலிய அணிகளுக்கு எதிரான டி20 தொடர்களில் இருந்து தோனி நீக்கப்பட்டபோது, “இதயம் நொறுங்கியது. தலைவன் தோனி இல்லாமல் ஒரு டி20' அணியா? மோசமான அணித்தேர்வு குழு. பிசிசிஐ, உங்களை ஆண்டவன் தான் காப்பாற்றணும். தலைவன் தோனி இல்லாமல் ஆணியக்கூட புடுங்க முடியாது. தெரிந்து கொள்ளுங்கள்” என்று கொதித்தெழுந்தார். 

இப்படி சும்மாவே ஆடுபவரின் கால்களில் சலங்கையைக் கட்டிவிட்டால் என்ன ஆட்டம் ஆடுவார்? யெஸ்.. சமீபத்தில் தலைவி நயனின் தயவால் தலைவன் தோனியை சந்திக்கும் வாய்ப்பு விக்னேஷ் சிவனுக்குக் கிட்டியது. இந்த சந்திப்பை புகைப்படத்துடன்  ட்விட்டரில் தட்டிவிட்ட விக்னேஷ் சிவன்...  “தோனியைக் காண வேண்டும் என்பது வாழ்நாள் கனவு. வாழ்க்கையிலேயே சந்தோஷமான, மிகவும் திருப்தியான தருணம் இது. இந்த தருணத்தை ஏற்படுத்திக் கொடுத்த கடவுளுக்கு நன்றி. அவர்  பாரத பிரதமராக ஒருநாள் இந்த நாட்டை ஆள்வதைக் காண காத்திருக்கிறேன். #என்னுடைய_கனவு” என்று சகல தெய்வங்களுக்கும் வேண்டுதல் வைக்கிறார்.

விக்னேஷ் சிவன் விருப்பப்படி தோனி பிரதமராகி விட்டால் தலைவி நயன்தாரா தமிழக முதல்வராவது அவ்வளவு கஷ்டமா என்ன? இனிமே ஒளிவு மறைவு இல்லாம குணமா ரெண்டு பேருக்கும் சேர்த்தே வேண்டுதல் வைங்க பாஸ்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

எது பண்ணாலும் பிளான் பண்ணி பண்ணுவோம் என்று கூறும் இயக்குனர்; சூர்யாவின் 47வது பட விழா பூஜை!
தன்னுடைய திரையுலக கதாநாயகன் அஜித் குமாரை சந்தித்த நடிகர் சிம்பு!