
பிரபல இயக்குனரும் நடிகருமான வெட்கட் பிரபுவின் தாயார் உடல்நல பிரச்சனைகள் காரணமாக அவதி பட்டு வந்த நிலையில் இன்று இரவு 11 :30 மணிக்கு காலமானார்.
தமிழ் திரையுலகில் இசை கடவுள் என போற்றப்படும் இசைஞானி இளையராஜாவின் சகோதரர் கங்கை அமரன். தமிழ்த் திரைப்பட உலகில் ஓர் இசை அமைப்பாளராகவும், பாடலாசிரியராகவும், திரைக்கதை ஆசிரியராகவும், நடிகராகவும், திரைப்பட இயக்குனராகவும் பன்முகத் திறமை கொண்டு விளங்குபவர். பல தொலைக்காட்சி இசைத்தொடர்களிலும் புகழ்பெற்றவர்.
மேலும் இவரது மூத்த மகன் வெங்கட் பிரபு, நடிகர் இயக்குனர் என இரண்டு வெற்றி குதிரைகளில் பயணம் செய்து வருகிறார். அதே போல் இவரது இளையமகன் பிரேம் ஜி அமரனும், இசையமைப்பாளர் நடிகர் என, தமிழ் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர்.
இந்நிலையில், கங்கை அமரனின் மனைவி மணிமேகலை வயது 69 . உடல்நல பிரச்சனை காரணமாக சென்னை காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இரவு 11 :30 மணியளவில் உயிரிழந்தார். இவரது மறைவிற்கு திரையுலகினர் பலர் தங்களது இரங்கல்களை தெரிவித்து வருகிறார்கள். இவரது இறுதி சடங்குகள் குறித்த தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.