’நடிகர் விஷால் கால்ஷீட் என்னிடம் இருப்பதாக மோசடி செய்தேனா?’...சீட்டிங் நடந்தது என்ன விளக்கும் இயக்குநர்...

By Muthurama LingamFirst Published Aug 21, 2019, 5:33 PM IST
Highlights

இன்று காலை சினிமா தயாரிப்பாளரான நரேஸ் கோத்தாரி என்பவர் விருகம்பாக்கம் போலீசில் அளித்த  புகார் மனு ஒன்றில் நடிகர் விஷாலிடம் கால்ஷீட் வாங்கி இருப்பதாக கூறி இயக்குனர் வி.சி.வடிவுடையான் தன்னை அணுகினார் என்றும் விஷால் நடிக்கும் படத்தை ரூ.7 கோடி செலவில் எடுக்க இருப்பதாக கூறிய அவர் இந்த படத்தை நீங்கள் தயாரியுங்கள் என்று தெரிவித்ததை நம்பி அவரிடம் 3 தவணைகளாக ரூ.47 லட்சம் பணம் கொடுத்து ஏமாந்ததாகவும் புகார் அளித்திருந்தார்.

தயாரிப்பாளரின் அந்தப் புகார் மனு மீது போலீஸார் விசாரணை நடத்திக்கொண்டிருக்கிறார்கள் என்ற தகவல் வந்த நிலையில், பத்திரிகையாளர் சமூகத்துக்கு ஒரு அவசர கடிதம் அனுப்பியுள்ளார் இயக்குநர் வடிவுடையான். அக்கடிதத்தில்,

பத்திரிகை, ஊடக நண்பர்களுக்கு வணக்கம்.இன்று காலை முதல் என்னை பற்றி தவறான செய்தி தொலைக்காட்சி மற்றும் சமூகவலை தளங்களில் ஒளிபரப்பாகி வருகிறது. சுரேஷ் கோத்தாரி என்பவர் நான் அவரிடம் விஷாலை வைத்து படம் இயக்குவதாக கூறி 47 லட்சம் பணம் கடன் வாங்கிகொண்டு திருப்பி தரவில்லை என்று காவல்நிலையத்தில் புகார் அளித்திருப்பதாக செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன அது முற்றிலும் தவறானது. சுரேஷ் கோத்தாரி யார் என்றே எனக்கு தெரியாது. அவருக்கும் எனக்கும்  எந்த சம்மந்தமும் இல்லை.

நான் கடந்த ஆண்டு அசோக் லோதா என்பவரிடம் ரூபாய் 3 லட்சம் கடனாக பெற்றேன். அதற்காக நிரப்பப்படாத காசோலை மற்றும் என் கையெழுத்திட்ட   பத்திரம் போன்றவற்றை கொடுத்து பணம் பெற்றேன். ஆனால் அந்த தொகையை வட்டியும், முதலுமாக அவருக்கு திருப்பி கொடுத்து விட்டேன். ஆனால் அவர் என் காசோலையையும், பத்திரத்தையும் திருப்பி தர மறுத்ததால், நான் அவர்மீது சென்னை 6 வது சிட்டி சிவில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தேன். அந்த வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது. அதனால் கோபமடைந்த அசோக் லோதா எனது நிரப்பப்படாத காசோலையையும், பத்திரத்தையும் சுரேஷ் கோத்தாரியிடம் கொடுத்து அதில் நான் அவரிடம் பணம் பெற்றது போல் நிரப்பி  தவறாக பயன்படுத்தி உள்ளனர் என்று எனக்கு சந்தேகம் உள்ளது.எனது பெயருக்கும், புகழுக்கும் கலங்கம் விளைவிப்பதற்காக இது போல் பொய்யான பழியை என்மீது சுமத்தியுள்ள அவர்கள் மீது நான் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுப்பேன்’என்று எழுதியுள்ளார்.

click me!