
பிக்பாஸ் இல்லத்தில் தொடர்ந்து அவமானங்களைச் சந்தித்து வரும் சேரனுக்காக ஆளாளுக்கு ‘உச்’ கொட்டிக்கொடிருக்கும் நிலையில் பிரபல இயக்குநர் வசந்தபாலனும் தன் பங்குக்கு சேரன் உடனே பிக்பாஸ் இல்லத்திலிருந்து வெளியேறவேண்டும் என்று வேண்டுகோள் வைத்திருக்கிறார்.
இன்னும் சில வாரங்கள் தாக்குப்பிடிக்கவேண்டுமே என்கிற சுயநலத்தில் சக போட்டியாளர்களுடன் சண்டை சச்சரவுகளில் ஈடுபட்டு பல சமயங்களில் பதிலுக்கு அவமானப்பட்டு வருகிறார் சேரன். இதற்காக ஏற்கனவே பலர் சேரனுக்கு வலதளப்பக்கங்களில் ’உங்க தகுதிக்கு இதெல்லாம் தேவையா சேரன்?’என்று பதிவுகள் போட்டு வருகின்றனர். இதே தொனியில் இன்று தனது முகநூல் பக்கத்தில் எழுதிய பதிவில்,...அன்புள்ள சேரன் சார் அவர்களுக்கு வணக்கம்!உங்களுக்கு இது கேட்காது என்று தெரியும்.
காற்றின் ரகசியப் பக்கங்களில்
இந்த செய்தி ஊடேறி
உங்களைத்தொடும் என்றே நம்புகிறேன்.
உங்களின் படங்களின் ரசிகனாய் சொல்கிறேன்.
வித்யாகர்வத்துடன்
நீங்கள் இருந்த இடம் மிக கம்பீரமானது.
பருந்து பறக்கும்
வானத்தின் உயரத்தில் சஞ்சரிப்பவர் நீங்கள். பாரதிகண்ணம்மா,பொற்காலம்,ஆட்டோகிராப்
என அற்புதமான இலக்கியப்படைப்புகள்.
திரையில் இலக்கியம் செய்ய ஆசைப்பட்டு
அதில் வென்று காட்டியவர் நீங்கள்.
காலத்தின் கரையான்
உங்களையும்
உங்கள் படங்களையும் அழித்துவிடமுடியாது.
இயக்குநர் மகேந்திரன்,
இயக்குநர் பாலுகேந்திராவுடன்
ஒப்பிடக்கூடிய திரை ஆளுமை நீங்கள்.
பிக்பாஸ் அரங்கில் இருப்பவர்களுக்கு
உங்களின் உயரம் தெரியாது.
நீங்களும் நடிகர் சரவணனும் ஒன்று என்று தான் நினைப்பார்கள்.
அறியாமை என்ன செய்ய......
உடனே பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறுங்கள். இயக்குனர் சங்கப் பதவியில்
கௌரவக்குறைவு ஏற்பட்ட போது
உடனே அதை விட்டு வெளியேறினீர்கள்.
ஆகவே கலைஞன் எந்த நிலையிலும்
அவனின் மேன்மையை
எந்த கீழ்மைக்கும் உட்படவிடுதல் வேண்டாம்....என்று வேண்டுகோள் வைத்திருக்கிறார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.