’இயக்குநர் சங்கமா, குடிகாரர்கள் சங்கமா?’...பொதுக்குழுவில் கதகளி ஆடிய கரு.பழனியப்பன்...

Published : Jul 08, 2019, 12:19 PM ISTUpdated : Jul 08, 2019, 12:23 PM IST
’இயக்குநர் சங்கமா, குடிகாரர்கள் சங்கமா?’...பொதுக்குழுவில் கதகளி ஆடிய கரு.பழனியப்பன்...

சுருக்கம்

இயக்குநர் சங்கத்துக்குள்  மோதல்கள் உச்சக்கட்டத்தை அடைந்து ஏகப்பட்ட மொட்டைக்கடிதாசுகள் நடமாட ஆரம்பித்துள்ள நிலையில், சற்றுமுன்னர் வடபழனியில் உள்ள கமலா தியேட்டரில் அச்சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் நடத்தப்பட்டது. இந்தக் கூட்டத்தில் வழக்கம்போல் முக்கியக் கலவரக்காரராக செயல்பட்ட இயக்குநர் கரு .பழனியப்பன் ,’சங்கக் கட்டிடத்தில் ஏராளமான காலி மது பாட்டில்கள் உள்ளன எனவும் அது  இயக்குநர் சங்கமா? கேளிக்கை விடுதியா? எனவும்  கேள்வி எழுப்பினார்.

தமிழ்நாடு திரைப்பட இயக்குநர் சங்க பொதுக்குழு கூட்டம் வடபழனியில் உள்ள கமலா தியேட்டரில்  நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் பாரதிராஜா தலைவர் பொறுப்பை ஏற்க மறுத்தது குறித்த விவாதத்தை செயலாளர் செல்வமணி முன்வைத்தார். இதுகுறித்து தீர்மானம் நிறைவேற்றவும் தலைவர் பதவியின் தேர்தலை வரும் 21 ஆம் தேதி நடக்கவிருக்கிற தேர்தலோடு சேர்த்து நடத்தலாம் என்பதற்கான ஒப்புதல் பெற வேண்டியும் உறுப்புனர்களின் ஒப்புதலை கேட்டிருந்தார்.

இதையடுத்து எப்படி எங்களை கேட்காமல் பாரதிராஜாவை தலைவர் பதவிக்கு நீங்கள் கேட்டீர்கள் என்ற ரீதியில் கரு. பழனியப்பன் உள்ளிட்டோர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து இருதரப்பினருக்கு கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.கரு.பழனியப்பன், பேசுகையில், இயக்குநர் சங்கத்துக்குள் ஏராளமான காலி மது பாட்டில்கள் உள்ளன எனவும் இயக்குநர் சங்கமா? கேளிக்கை விடுதியா? எனவும் கேள்வி எழுப்பினார். அந்தக் கேள்வியால் பாதிக்கப்பட்டவர்கள் கடுமையான கூச்சலை எழுப்பினர்.

அதைப்பொருட்படுத்தாமல் தொடர்ந்து பேசிய கரு.பழனியப்பன்,’இயக்குநர் சங்க பொதுக்குழுவிற்கு பெரும்பாலும் வராத பாரதிராஜா, கடந்தமுறை மட்டுமே வந்தார்.பாரதிராஜாவால்தான் தமிழ் சினிமாவின் முகம் மாறியது. அதற்காக அவரை சாமியாக கும்பிட வேண்டும் என அவரே விரும்பியதில்லை. அவரை இங்கு அழைத்து வந்து அவமானப்படுத்த வேண்டாம்’ என பேசினார். மேலும் பாரதிராஜா மீது மரியாதை இருப்பதாகவும் அவரும் தேர்தலில் போட்டியிட்டு ஜனநாயக முறையில் தேர்வு செய்யப்பட வேண்டும் என்ற ரீதியில் பழனியப்பன் கருத்து தெரிவித்தார். கரு.பழனியப்பனின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து கடும் வாக்குவாதம் நடைபெற்றது. ஆனால் எக்காரணம் கொண்டும் இம்முறை தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என்பதில் உறுதியாக இருக்கிறாராம் பாரதிராஜா.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

உயிர் போய் உயிர் வந்துருக்கு!" - பயங்கர கார் விபத்தில் சிக்கிய ரஜினி பட நடிகை நோரா ஃபதேஹி!
ஜவ்வா இழுக்கும் இயக்குநர்; ரொம்பவே ஒர்ஸ்ட்; சிறகடிக்க ஆசை சீரியலை கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்!