நடிப்பதில் இது மட்டுமே சவாலாக இருந்தது! இயக்குனர் சுசீந்திரன் ஓபன் டாக்!

By manimegalai aFirst Published Jun 20, 2019, 12:37 PM IST
Highlights

வெண்ணிலா கபடிக்குழு, நான் மகான் அல்ல, அழகர்சாமியின் குதிரை, உள்ளிட்ட  10க்கும் மேற்பட்ட படங்களை இயக்கி, வெற்றி படங்களை கொடுத்துள்ளவர் இயக்குனர் சுசீந்திரன்.
 

வெண்ணிலா கபடிக்குழு, நான் மகான் அல்ல, அழகர்சாமியின் குதிரை, உள்ளிட்ட  10க்கும் மேற்பட்ட படங்களை இயக்கி, வெற்றி படங்களை கொடுத்துள்ளவர் இயக்குனர் சுசீந்திரன்.

தற்போது,  தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும், படத்தை இயக்கிய ராம் பிரகாஷ் ராயப்பா, இயக்கத்தில் 'சுட்டு பிடிக்க உத்தரவு' என்கிற படத்தில், நடிகராகவும் அறிமுகமாகியுள்ளார். இந்த படத்தில் நடித்த அனுபவம் குறித்து பகிர்ந்து கொண்டுள்ள சுசீந்தரன்...  "சுட்டு பிடிக்க உத்தரவு படத்தில்" நல்ல கதாபாத்திரம் அமைந்ததால் நடிக்க ஒப்புக் கொண்டேன்.

இந்த படத்தில் ஒரு நடிகனாக ஓடுவது மட்டுமே சவாலாக இருந்தது.  படம் வெளியான பிறகு எனது நடிப்பை பலரும் பாராட்டியுள்ளது மகிழ்ச்சியாக இருக்கிறது.  நல்ல கதை மற்றும் வித்தியாசமான கதாபாத்திரம் அமைந்தால் தொடர்ந்து நடிப்பேன்.  

இயக்குனர் தொழிலில் உச்சத்தை இன்னும் நான் அடையவில்லை,  அதை தொட்ட பிறகு நடிப்பு விஷயங்களில் முழுமையாக கவனம் செலுத்துவேன்.  'ஏஞ்சலினா', 'கென்னடி கிளப்'  ஆகிய படங்களை இயக்கி முடித்துள்ளேன்.  இந்த படங்கள் அடுத்தடுத்து திரைக்கு வர உள்ளன என கூறினார்.

தொடர்ந்து பேசிய சுசீந்தரன், ஏஞ்சலினா இக்கால இளைஞர்களுக்கான திகில் படம் என்றும், இதில் பொள்ளாச்சி சம்பவமும் இடம் பெறும் என தெரிவித்துள்ளார். மேலும் இரண்டாவது பாகம் படங்கள் எடுப்பதில் தனக்கு உடன்பாடு கிடையாது.  இரண்டாவது பாகம் படங்கள் எதுவும் முதல் பாகம் அளவுக்கு வெற்றி பெறவில்லை. ஒரு படத்தின் கதையை  எழுதும்போதே இரண்டு பாகத்தையும் எழுதினால் தான் அது வெற்றி பெறும். அப்படி எழுதி வெற்றியடைந்த படம் தான் பாகுபலி என ஒரு இயக்குனராகவும், நடிகராகவும் தன்னுடைய கருத்துக்களை தெரிவித்துள்ளார்.

click me!