
இன்று நடந்த திரைப்பட இயக்குநர் சங்கத்துக்கான தேர்தல் முடிவுகள் சற்று முன்னர் அறிவிக்கப்பட்டன. அனைவரும் எதிர்பார்த்ததுபோலவே இயக்குநர் ஆர்.கே.செல்வமணி தன்னை எதிர்த்துப்போட்டியிட்ட வித்யாசாகரை விட 1386 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார்.
தொடர்ந்து பல குழப்பங்களும் சர்ச்சைகளும் நீடித்து வந்த நிலையில், இன்று காலை 7 தமிழ்த் திரைப்பட இயக்குநர் சங்கத் தேர்தல் தொடங்கி மாலை 4 மணிக்கு முடிந்தது. தலிவர் பதவிக்கு மொத்தம் 1503 வாக்குகள் பதிவாம நிலையில் 1386 வாக்குகள் பெற்று அபாரமாக வெற்றிபெற்றார் ஆர்.கே.செல்வமணி.
தமிழ் திரைப்பட இயக்குனர் சங்கத்துக்கு விக்ரமன் தலைவராக இருந்தார். அவரது பதவி காலம் முடிந்ததை தொடர்ந்து கடந்த மாதம் சென்னையில் நடந்த சங்க பொதுக்குழுவில் பாரதிராஜாவை இயக்குனர் சங்க புதிய தலைவராக போட்டியின்றி தேர்வு செய்தனர். தேர்தல் நடத்தாமல் பாரதிராஜாவை தேர்வு செய்ததற்கு விமர்சனங்கள் கிளம்பின.
சில தயாரிப்பாளர்கள் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவர் பதவிக்கு பாரதிராஜா போட்டியிட வேண்டும் என்று வற்புறுத்தி வந்தனர். இந்த நிலையில் இயக்குனர் சங்க தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாக பாரதிராஜா திடீரென அறிவித்தார். இதனை அடுத்து, திரைப்பட இயக்குனர் சங்கத்துக்கு புதிய நிர்வாகிகளை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலை ஜூலை 14ம் தேதி நடத்துவதென ஜூன் 10ம் தேதி நடந்த பொதுக்குழுவில் முடிவெடுக்கப்பட்டது. பின்னர் அந்த தேதியும் மாற்றப்பட்டு ஜூலை 21[இன்று] தேர்தல் அற்விக்கப்பட்டது. இதன்படி தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்க தேர்தலுக்கான வாக்குப் பதிவு இன்று தொடங்கியது.
தற்போது தலைவர் பதவிக்காக வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் மற்ற பதவிகளுக்கான வாக்கு எண்ணிக்கைகள் நடந்துவருகின்றன.இன்று இரவுக்குள் அனைத்து முடிவுகளும் அறிவிக்கப்படும் என்று தெரிகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.