'சினிமாவுக்காக எத்தனையோ கோடிகளை இழந்திருக்கிறேன்’-எஸ்.ஏ.சந்திரசேகர் பதிலடி...

Published : Oct 03, 2019, 10:22 AM IST
'சினிமாவுக்காக எத்தனையோ கோடிகளை இழந்திருக்கிறேன்’-எஸ்.ஏ.சந்திரசேகர் பதிலடி...

சுருக்கம்

‘எனது 40 ஆண்டுகால திரையுலக அனுபவத்தில் நான் யாரையும் ஏமாற்றியதில்லை. பலரை நம்பி எத்தனையோ கோடிகளை இழந்திருக்கிறேன். நான் 20 லட்சங்கள் ஏமாற்றியதாகப் புகார் கூறியிருக்கும் மணிமாறன் என்பவர் மீது இன்று கமிஷனர் அலுவலகத்தில் புகார் தெரிவிக்கவிருக்கிறேன்’என்கிறார் இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர்.

‘எனது 40 ஆண்டுகால திரையுலக அனுபவத்தில் நான் யாரையும் ஏமாற்றியதில்லை. பலரை நம்பி எத்தனையோ கோடிகளை இழந்திருக்கிறேன். நான் 20 லட்சங்கள் ஏமாற்றியதாகப் புகார் கூறியிருக்கும் மணிமாறன் என்பவர் மீது இன்று கமிஷனர் அலுவலகத்தில் புகார் தெரிவிக்கவிருக்கிறேன்’என்கிறார் இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர்.

இது தொடர்பாக தனது ‘கிரீன் சிக்னல் நிறுவனத்தின் மூலம் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில்,...2018-ல் எஸ்.ஏ.சந்திரசேகரன் தயாரிப்பில் “டிராபிக் ராமசாமி” என்ற படம் தயாரிக்கபட்டது.இந்தப்படத்தை கனடா நாட்டை சேர்ந்த பிரமானந்த் சுப்பிரமணியன் என்பவர் தமிழ்நாடு வெளியிடும் உரிமையை பெற்றிருந்தார்.இதற்காக 20 லட்சம் முன்பணம் கொடுத்து ஒப்பந்தமும் போட்டிருந்தார்.ஆனால் ஒப்பந்தப்படி அடுத்த கட்ட பணத்தை பிரமானந்த் சுப்பிரமணியனால் தர முடியவில்லை.

படவெளியீட்டிற்கு சில தினங்களுக்கு முன்பு படம் வேண்டாம் என்று சொன்னார்.அதனால் வியாபார சம்பந்தமான முடிவுகள் எடுக்க முடியாமல் தடுமாறினோம்.அப்போதெல்லாம் படம் வெளியிடும் தேதியை தயாரிப்பாளர்கள் சங்கமே முடிவு செய்வதால் படவெளியீட்டை தள்ளிவைக்கவும் முடியாத நிலை.

இந்நிலையில் படம் வேறு விநியோகஸ்தர்களுக்கு விற்கபட்டால் பணத்தை தந்துவிடுவதாக தெரிவிக்கப்பட்டது.ஆனால் கடைசிநேரமாக இருந்தமையால் படத்தை வாங்க யாரும் முன் வரவில்லை.இதனால் எஸ்.ஏ.சந்திரசேகரனே தமிழகமெங்கும் வெளியிடும் நிலைக்கு தள்ளப்பட்டார்.இதனால் கோடிக்கணக்கான ரூபாய் நஷ்டத்தை சந்தித்தார்.ஆனால் இந்தப்படத்தை வாங்குவதற்கோ வெளியிடுவதற்கோ எந்த தொடர்புமே இல்லாத திரு.மணிமாறன் அவர்கள் கமிஷனர் அலுவலகத்தில் எஸ்.ஏ.சந்திரசேகரன் பணத்தை ஏமாற்றிவிட்டார் என்று புகார் அளித்துள்ளார்.

தனது 40 ஆண்டு திரையுலகப் பயணத்தில் எஸ்.ஏ.சந்திரசேகரன் இதுவரை யாரையும் ஏமாற்றினார் என்று எந்த புகாரும் வந்ததில்லை.சினிமா தொழிலில் நாணயத்தையும் ஒழுக்கத்தையும் கடைபிடித்து வருபவர் எஸ்.ஏ.சந்திரசேகரன்.அவரது புகழை கெடுக்கவும் அவருக்கு மன உளைச்சலை ஏற்படுத்தவும் திட்டமிட்டு செயலாற்றியுள்ளார்கள்.நடந்த உண்மைகளை ஆதாரத்துடன் நாளை கமிஷனரை சந்தித்து புகார் கொடுக்க உள்ளார்.இவ்வாறு எஸ்.ஏ.சந்திரசேகரின் “க்ரீன் சிக்னல்” நிறுவனம் தெரிவித்துள்ளது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

உயிர் போய் உயிர் வந்துருக்கு!" - பயங்கர கார் விபத்தில் சிக்கிய ரஜினி பட நடிகை நோரா ஃபதேஹி!
ஜவ்வா இழுக்கும் இயக்குநர்; ரொம்பவே ஒர்ஸ்ட்; சிறகடிக்க ஆசை சீரியலை கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்!