
ஜல்லிக்கட்டு போராட்டம் அறப்போராட்டமாக ஆரமித்து, கலவரமாக மாறி தற்போது மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் போராட்டத்திற்கு வெற்றி கிடைத்துள்ளது என்று கூறலாம்.
இந்த போராட்டத்தில் கலந்து கொண்டு மாணவர்களுக்கு உறுதுணையாக இருந்தவர்களில் முக்கியமானவர் ஹிப்ஹாப் ஆதி தான் என்பது அனைவரும் அறிந்தது தான். ஜல்லிக்கட்டு விழிப்புணர்வையை ஏற்படுத்தும் விதத்தில் ஒரு பாடலையும் வெளியிட்டார்.
மேலும் போராட்டத்தின் இறுதியில் இவரது பேச்சு சில சர்ச்சைகளையும் ஏற்படுத்தியது.
இந்நிலையில் இயக்குனர் ராம் ஆதி குறித்து ஒரு கருத்தை வெளியிட்டுள்ளார்.
இதில் ‘ஆதி பேசியதை பார்த்தேன், அதை எத்தனை பேர் பார்த்திருப்பார்கள், இதை அரசாங்கமே முறையாக மெரினாவில் இருந்தவர்களிடம் தெரிவித்திருக்கலாம்.
ஆதி பேசுகையில் சமூக விரோதிகள் உள்ளே வந்துவிட்டனர் என்றார், அவர் அப்படி பேசுவதை பார்க்கையில் அவருக்கும், சுவாமிக்கும்(அரசியல் பிரமுகர்) பெரிய வித்தியாசம் இல்லை என்றே தோன்றுகின்றது’ என அதிரடி கருத்தை ராம் கூறியுள்ளார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.