
ஏழை, பணக்காரன், என எந்த ஒரு பேதமும் இல்லாமல் அனைவரையும் பீதியடைய வைத்து, மொத்த உலக மக்களையும் அச்சுறுத்தி வரும், கொரோனா வைரஸால், பல பிரபலங்கள் தொடந்து, பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.
அந்த வகையில், கடந்த காதம் 29 ஆம் தேதி, பாகுபலி என்கிற படத்தை இயக்கி ஒட்டு மொத்த திரையுலகினரையும், தென்னிந்திய சினிமாவின் பக்கம் திரும்பி பார்க்க வைத்த இயக்குனர் ராஜ மௌலி மற்றும் அவருடை குடும்பத்தை சேர்த்தவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டதாக, ராஜமௌலியே தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.
இதையடுத்து இவர்கள், வீட்டிலேயே தங்களை தனிமை படுத்தி கொண்டு, மருத்துவர்களின் அறிவுறுத்தல் படி உரிய சிகிச்சை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில், இவர் உட்பட இவருடைய குடும்பத்தினர் அனைவரும் கொரோனாவில், இருந்து முழுமையாக குணமடைந்து விட்டதாக தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ட்விட்டர் பதிவில் அவர் கூறியுள்ளதாகவாது... “இரண்டு வாரம் தனிமையில் இருந்த நாட்கள் நிறைவடைந்து விட்டது. தற்போது எந்த அறிகுறியம் இல்லை. டெஸ்ட் எடுத்து பார்த்ததில், எங்கள் அனைவருக்கும் தொற்று இல்லை (கொரோனா நெகட்டிவ்) என தெரிய வந்துள்ளது. பிளாஸ்மா தானம் செய்யத் தேவையான ஆண்டிபாடிஸ் உடலில் உருவாகியிருக்கிறதா என்பதைப் பார்க்க மருத்துவர் 3 வார காலம் காத்திருக்கச் சொல்லியிருக்கிறார்.” இவ்வாறு ராஜமவுலி தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.
ராஜமௌலி தற்போது ராம் சரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர், நடித்து வரும் ஆர்.ஆர்.ஆர் படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தை படப்பிடிப்பு பரபரப்பாக நடந்து வந்த நிலையில், கொரோனா ஊரடங்கு காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. கொரோனா பிரச்சனை முடிவுக்கு வந்ததும் இந்த படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.